[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 10:21.27 AM GMT ]
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை மீள திறக்குமாறு வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் பம்பேஹின்ன சந்தியில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
எனினும் மாணவர்கள் விடுதிகளில் இருந்து வெளியேறும் வரையில் பல்கலைக்கழகத்தை திறப்பது தொடர்பில் தம்மால் தீர்மானிக்க முடியாது என பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஷந்தன உடவத்த தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தின் மாணவிகள் சிலர் ஆண் மாணவர்கள் தங்கும் சிங்கராஜ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை காரணமாக பல்கலைக்கழகம் நேற்று அவசரமாக மூடப்பட்டது.
மாணவிகளுக்கான புதிய விடுதி உயர்கல்வியமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவினால் நேற்று திறக்கப்படவிருந்த நிலையில், விடுதி கட்டடம் தரமற்ற வகையில் இருப்பதாக தெரிவித்து பல்கலைக்கழகத்திற்கு செல்லும் பம்பஹிந்த சந்தியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
இதன்போது மாணவர்கள் அமைச்சரின் வாகனம் பயணிப்பதற்கு இடையூறு விளைவித்த நிலையில், காவல்துறையினர் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டு மாணவர்களை விரட்டியடித்தனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் புதிய கட்டத்தை திறந்து வைத்ததுடன், மற்றுமொறு கட்டடத்திற்காக அடிக்கல்லையும் நாட்டிச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATaKWmo0.html
பாடசாலைகளில் படையினரின் தலையீட்டை உடன் நிறுத்து: யாழில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 10:24.27 AM GMT ]
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற குறித்த போராட்டத்தில் தெற்கிலிருந்து சிங்கள ஆசிரியர்கள் மற்றும் வடக்கிலிருந்து தமிழ் ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததுடன், அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.
மேலும் குறித்த போராட்டத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பினர் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, சுற்றறிக்கையை தமிழில் வெளியிடு, பாடசாலைகளில் படையினரின் தலையீட்டை உடன் நிறுத்து, படையினர் ஆக்கிரமித்திருக்கும் பலாலி ஆசிரியர் கலாசாலையை உடன் வழங்கு, என்பன போன்ற கோஷங்களை பதாகைகளாகவும், கோஷங்களாகவும் எழுப்பிக் கொண்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது படையினரால் ஏவிவிடப்பட்ட கும்பல் ஒன்று மேற்படி போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு முன்பாக, திடீரென கூடி சர்வதேச தொண்டு நிறுவனங்களிடமிருந்து டொலர்களில் பணத்தைப் பெற்று கூச்சலிடும் தொழிற்சங்கத் தலைவர்கள் என்ற பாதகைகளுடன் கோஷங்களை எழுப்பினர்.
இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் அவர்களை புகைப்படம் எடுத்தனர். பின்னர் எதற்காக இவ்வாறு போராட்டம் நடத்துகின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் கேட்டபோது,
ஆசிரியர்களுக்குச் சார்பாகவே நடத்துகின்றோம் என அவர்கள் கூறினர். அப்படியானால் நீங்கள் வைத்திருக்கும் பதாகையில் என்ன எழுதியிருக்கின்றது? என தெரியுமா?எனக்கேட்டதன் பின்னர் அவர்கள் தங்கள் பதாகைகளை திருப்பி பார்த்துவிட்டு அவற்றை தூக்கி வீசிவட்டு அங்கிருந்து சென்றதுடன், சில ஆசிரியர்களும், படையினருமே தமக்கு அந்த பதாகைகளை தந்ததாகவும், ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகின்றார்கள் அவர்களுக்கு சார்பாக அவர்களுடைய போராட்டத்திற்கு முன்பாக இதனை பிடித்துக் கொண்டிருந்தால் போதும் என அவர்கள் தமக்கு கூறியமையினாலேயே தாம் வந்ததாகவும் அவர்கள் கூறியதுடன், அங்கிருந்து உடனடியாகவே சென்றுவிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWmo1.html
Geen opmerkingen:
Een reactie posten