[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 02:32.39 PM GMT ]
இந்த நடைமுறை எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வார நாட்களில் காலை 7 மணிமுதல் காலை 9 மணிவரை இரண்டு மணித்தியாலயத்துக்கு மட்டுமே இந்த கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் என்றும் சனி, ஞாயிறு மற்றும் போயா ஆகிய தினங்களில் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மேற்குறிப்பட்ட நேரத்தில் வார நாட்களில் ஏற்படும் வாகன நெரிசலை கவனத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமை அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATXKVer6.html
ரணில் மீதோ சோபித தேரர் மீதோ நம்பிக்கையில்லை: கே.டி. லால்காந்த
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 01:32.10 PM GMT ]
இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் 12வது வருடாந்த மாநாட்டில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிறைவேற்று அதிகாரத்தை கையில் எடுத்த பின்னர், அதனை இரத்துச் செய்வதாக கூறிய எவரும் அதனை செய்யவில்லை. அதனை இரத்துச் செய்வதாக கூறும் எவர் மீதும் எமக்கு நம்பிக்கையில்லை.
ரணில் தேர்தலில் போட்டியிட போவதாக கூறுகின்றார். அவர் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்ய போகிறாரா இல்லையா என்பது எமக்கு தெரியாது.
சோபித தேரரும் அதனை செய்வாரா என்பது எமக்கு தெரியாது. அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு பௌத்த பிக்கு என்றாலும் நம்பிக்கையில்லை.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிக்க வேண்டுமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட நாடாளுமன்றம் அவசியம்.
அப்படியான அதிகாரம் கொண்ட நாடாளுமன்றத்தை மக்கள் நாட்டில் ஸ்தாபிக்க வேண்டும். அப்போது ஜனாதிபதி விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்ய முடியும் எனவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVer5.html
Geen opmerkingen:
Een reactie posten