தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 oktober 2014

பம்பலப்பிட்டி அழகு நிலையத்தை மீண்டும் மருத்துவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

அரசியற்கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் மஹிந்த தேசப்பிரிய
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 12:54.59 PM GMT ]
தேர்தல் சட்டங்கள் தொடர்பில் ஆணையாளர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்துகளும், யோசனைகளும் இதன்போது கவனத்திற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதன்போது தெரிவித்தார்.
நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டங்களை வலுவூட்டுவது குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிக்கின்றார்.
அதேபோன்று தேர்தல் சட்டங்கள் தொடர்பில் காணப்படுகின்ற சிக்கல்கள் குறித்தும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்துரையாடப்படும் என தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATXKVer1.html

வத்திக்கானில் பாப்பரசரை சந்தித்தார் ஜனாதிபதி மகிந்த
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 01:13.58 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வத்திக்கானில் இன்று புனித பரிசுத்த பாப்பரசரை சந்தித்து, இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பாப்பரசரின் இலங்கை வருகைக்கான உத்தியோகபூர்வ அழைப்பை கையளித்த பின் இந்த பேச்சுவார்த்தை நடந்ததாக வத்திக்கான் அரச செயலாளர் கர்தினால் பீ. பெரோலின் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையின் சமூக, பொருளாதார முன்னேற்றங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் பாப்பரசரின் இலங்கை விஜயம் முழு நாட்டு மக்களுக்கு முக்கியமானது எனவும் அது நாட்டின் சமாதானம், நியாயம் மற்றும் நல்லிணக்கத்திற்கு வலுசேர்ப்பதாகும் எனவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVer2.html
பம்பலப்பிட்டி அழகு நிலையத்தை மீண்டும் மருத்துவரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 01:15.08 PM GMT ]
ஊசி மருந்து விஷமானத்தில் பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய பம்பலப்பிட்டியில் உள்ள அழகு நிலையத்தை அதனை நடத்தி வந்த மருத்துவரிடமே கையளிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் சஹாப்தீன் இன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி பொலிஸாரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ள அந்த அழகு நிலையத்தை நாளை காலை 10 மணிக்கு சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் கையளிக்குமாறும் நீதவான் அறிவித்துள்ளார்.
அத்துடன் அழகு நிலையத்தை நடத்துவதற்கு தேவையான தகுதிகள் குறித்து விசேட விசாரணை ஒன்றை நடத்துமாறும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உடலில் பருமனை குறைக்கும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் அழகு நிலையத்திற்கு சிசிச்சை பெற சென்ற கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் மருத்துவர் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த அழகு நிலையத்தை பொலிஸார் சீல் வைத்தனர்.
அத்துடன் அதனை நடத்தி வந்த நிமல் கமகே என்ற மருத்துவரும் கைது செய்யப்பட்டார்.
பின்னர், அவர் 50 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 5 லட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்யப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVer3.html
கஞ்சா விற்ற பிக்குவுக்கு விளக்கமறியல்
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 01:16.48 PM GMT ]
கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் மேல் நீதிமன்றில் பிக்குவுக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பிக்குவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிபதி தம்மிக்க கனேபொல உத்தரவிட்டார்.
ஆனாலும் பிணை வழங்கவென விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பிக்கு ஏற்றுக் கொள்ளாததால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி ஒன்றில் கஞ்சா கொண்டு சென்ற போது குறித்த பிக்கு தம்புத்தேகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATXKVer4.html

Geen opmerkingen:

Een reactie posten