[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 03:05.38 PM GMT ]
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் இந்த சேவை நடத்தப்படவுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சர்வதேச ஐஆர்கொன் நிறுவனம் இந்த சேவையை நடத்தவுள்ளது.
இதேவேளை தலைமன்னாருக்கும் மடுவுக்கும் இடையிலான ரயில் பாதை புனரமைப்புக்கள் தற்போது நிறைவடைந்து கொண்டிருப்பதாக ஐஆர்கொன் நிறுவன முகாமையாளர் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த ரயில் பாதை அமைக்கப்படுவதன் மூலம் இலங்கை- இந்திய கப்பல் சேவையை ஆரம்ப ஏதுவாக அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
1983 ஆம் ஆண்டுக்கு முன்னர், தலைமன்னார் வரைக்கும் மேற்கொள்ளப்பட்ட ரயில் சேவையின் ஊடாக இலங்கை- இந்திய கப்பல் சேவையும் சுமூகமாக இடம்பெற்று வந்தமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVer7.html
ராஜ் ராஜரட்ணத்தின் மீது மற்றுமொரு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 03:21.40 PM GMT ]
உட்சந்தை மோசடி தொடர்பில் ராஜ் ராஜரட்ணம் மூன்று வருடங்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் இலங்கையில் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதிகளை அனுப்பியதாகவும் இதன்காரணமாக பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகவும் குற்றம் சுமத்தி மற்றும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் அமைப்பு அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ராஜரட்ணம், அவருடைய தந்தை மற்றும் குடும்பத்தினர் விடுதலைப் புலிகளுக்கு நிதி அனுப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ராஜரட்ணம், தமிழ் புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக 5 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையின் தமிழ் மக்களின் நலனுக்காகவே பணம் அனுப்பப்பட்டதாக ராஜரட்ணம் குடும்ப சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVesy.html
நோனிஸ் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை: சஜின் வாஸ்- விசாரணைக்கு உத்தரவு
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 03:44.02 PM GMT ]
தனியார் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மறைப்பதற்கு எதுவும் இல்லை, எங்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதே தவிர, தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை.
உத்தியோகபூர்வம் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ரோம் வந்துள்ளதால், இலங்கை திரும்பியவுடன் இந்தச் சம்பவம் குறித்து தெளிவுபடுத்துவேன்.
கலாநிதி கிறிஸ் நோனிஸ் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார், அது அவரது தனிப்பட்ட தீர்மானம்.
நாட்டில் சட்டம் நடைமுறையில் உள்ளதால், சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதன் மூலம் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கமுடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிறிஸ் நோனிஸ் மீது சேனுகா குற்றச்சாட்டு! விசாரணைக்கு உத்தரவு
பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸுக்கு எதிராக புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் என்ன குற்றச்சாட்டு என்ற விடயம் வெளியாகவில்லை.
ஏற்கனவே கடந்த வாரத்தில் ஜனாதிபதி குழுவினர் அமரிக்காவுக்கு சென்றிருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன் விருந்து ஒன்றின்போது கிறிஸ் நோனிஸின் கன்னத்தில் அறைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து நோனிஸ் தமது பதவிவிலகல் கடித்தை சமர்ப்பித்தார்.
இந்தநிலையில் வெளியுறவு அமைச்சின் செயலாளர் சேனுகா செனவிரட்ன, நோனிஸ் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும் என்ன குற்றச்சாட்டு என்பதை தெரிவிக்கவில்லை.
இதனையடுத்து நோனிஸ் தாக்கப்பட்டமை மற்றும் சேனுகா, நோனிஸ் மீது சுமத்திய குற்றச்சாட்டு ஆகியன தொடர்பில் விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று இரவு தெரிவித்துள்ளது.
இதேவேளை இது நோனிஸை வழிக்கு கொண்டு வருவதற்கான உத்தியாக இருக்கலாம் என்று அரசியல் தரப்பினர் கருதுகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVesz.html
Geen opmerkingen:
Een reactie posten