[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 03:25.19 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹையேஸ் வான் விபத்துக்குள்ளாகியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் மாதம்பை பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்.கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய காந்தி சுஜி என்ற இளைஞனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தனது தந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக அழைத்துச் சென்றபோது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் வான் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழந்த இளையஞரின் தந்தையும், நண்பரும் காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்திசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் - கொழும்பு வீதி விபத்தில் யாழ் இளைஞர் பலி
சிலாபம் கொழும்பு பிரதான வீதியின் கம்பல மற்றும் காக்க பள்ளி இடையில் பகுதியில் இடம்பெற்ற இரண்டு வாகன விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை நடந்துள்ளது. வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றில் வான் மோதியத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதுடன் வானில் பயணம் செய்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் மூன்று பேர் பெண்கள்.
யாழ்ப்பாணம் கொட்டடி பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான இளைஞரே விபத்தில் இறந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வானே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை காக்கபள்ளி பிரதேசத்தில் வான் ஒன்றின் பின்னால், முச்சக்கர வண்டி மோதியத்தில் அதில் பயணம் செய்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவங்களில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவங்களில் காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக வேகத்துடன் வாகனத்தை செலுத்தியமையே இந்த இரு விபத்துகளுக்கும் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVgx4.html
ஆஸியிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களுக்கு சித்திரவதையா? இலங்கை மறுப்பு
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 04:00.04 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரி மறுக்கப்பட்டு, இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்கள் சித்திரவதைகளை அனுபவித்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டினை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.
புகலிடம் மறுக்கப்பட்டு நாடுகடத்தப்படும் இலங்கையர்கள் துன்புறுத்தலுக்கும், பாலியல் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாக அவுஸ்திரேலியாவில் ஊடகம் ஒன்று இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது.
இது குறித்து இலங்கையின் அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் திஸர சமரசிங்க கருத்து வெளியிடுகையில்,
அவுஸ்திரேலியாவின் எஸ்.பி.எஸ். வானொலி சேவை வெளியிட்ட செய்தி பக்கச்சார்பானது. உண்மைக்குப் புறம்பானது, திரிபுபடுத்தப்பட்டது எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு திணைக்களமும் இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளது.
கடந்த காலங்களில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டபோது இலங்கை அரசாங்கத்திடம் இது தொடர்பான உத்தரவாதங்களை தான் பெற்றுள்ளது எனவும், தான் இந்த வாக்குறுதிகளையே நம்பியிருக்கின்றது எனவும் அது தெரிவித்துள்ளது.
எனினும், இந்த விடயம் குறித்து விசாரணை செய்வதற்கான தகவல்களை தான் கோரிய போதிலும் அதற்குரிய பதில் கிடைக்கவில்லை எனவும் ஆஸியின் எல்லை பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்தது.
தொடர்புடைய செய்தி- நரகத்தை எதிர்நோக்கிய இலங்கையர்கள்: ஆஸி ஊடகவியலாளர் கவலை
http://www.tamilwin.com/show-RUmszATVKVgx5.html
Geen opmerkingen:
Een reactie posten