[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 05:30.42 AM GMT ]
காலி, ஹவுபே பிரதேசத்தைச் சேர்ந்த சிசிரகுமார என்பவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்ற அழைப்பாணை ஒன்று கிடைத்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் சீட்பெல்ட் போடாமல் பயணித்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கெதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அழைப்பாணை அவரை மட்டுமன்றி, அப்பிரதேசவாசிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மோட்டார் சைக்கிளுக்கு சீட்பெல்ட் என்ற சட்டம் தொடர்பில் தாம் இதுவரை அறிந்திருக்கவில்லை என்று பிரதேசவாசிகள் பொலிசாரைக் கிண்டல் அடிக்கத் தொடங்கியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVeu4.html
இலங்கை அகதிகள் முகாமில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 05:32.47 AM GMT ]
தமிழ்நாடு சின்னப்பள்ளிக்குப்பம் அகதிகள் முகாமைச் சேர்ந்த 18 வயதுடைய எஸ். பிரிட்டன் என்ற இளைஞன் மாலை நேர வகுப்பு நடத்தி வந்துள்ளார்.
அவரிடம் கல்வி கற்கச் சென்ற 5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி வேலூர் வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVeu5.html
Geen opmerkingen:
Een reactie posten