தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 oktober 2014

நாடாளுமன்ற பலம் எங்களிடம்: தோல்வியை ஒப்புக் கொள்ளும் அமைச்சர் விமல்!

சால்வையே எங்கள் சரணாகதி: வரவு- செலவுத் திட்டத்தைப் பாராட்டும் சம்பிக்க
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 07:49.07 AM GMT ]
அரசாங்கம் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக, வரவு செலவுத்திட்டம் குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக அண்மைக்காலமாக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தார். அவரது கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியையும் இழுத்துக் கொண்டு ஆளுங்கட்சியிலிருந்து வெளியேற அக்கட்சியின் முக்கியஸ்தர்களும் முயற்சித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு அமைச்சர் சம்பிக, மின்சக்தி அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான விபரங்கள் நேற்று நாடாளுமன்றத்தில் வெளியானது. இதனையடுத்து அமைச்சரின் தொனியிலும் சட்டென்று ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதனை உணர்த்தும் வகையில் அரசாங்கத்தின் அடுத்த வருடத்திற்கான வரவு-செலவுத்திட்டம் குறித்து அமைச்சர் சம்பிக பாராட்டுத் தெரிவித்துள்ளார். புதிய உற்பத்தித்துறைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், புதிய உற்பத்திகளை ஊக்குவிக்கும் நாடுகள் விரைவில் அபிவிருத்தியடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது அமைச்சின் சார்பில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதே நேரம் தனது அமைச்சுக்கு எதிர்காலத்தில் கூடுதல் நிதி வேண்டும் என்ற கோரிக்கையையும் மறைமுகமாக அவர் முன்வைத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnt2.html
நாடாளுமன்ற பலம் எங்களிடம்: தோல்வியை ஒப்புக் கொள்ளும் அமைச்சர் விமல்
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 08:10.51 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலில் எந்த வகையான பெறுபேறுகள் வந்தாலும் இந்த அரசாங்கத்திடமே நாடாளுமன்றத்தின் பலம் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்று கேகாலையில் நடைபெற்ற வீடமைப்பு அமைச்சின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மூலமாக இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்துவிடலாம் என்று ஒரு சிலர் எதிர்பார்க்கின்றனர்.
எனினும் ஜனாதிபதிக்கு இன்னும் இரண்டரை வருடங்கள் பதவிக்காலம் இருக்கின்றது. அதே போன்று நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைப் பலமும் எங்கள் கையிலேயே இருக்கின்றது.
எனவே தற்போதைய நிலையில் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் இந்த அரசாங்கத்தின் ஆட்சிதான் தொடர்ந்திருக்கும்.
பொதுமக்களுக்கான வீடமைப்பு உள்ளிட்ட அனைத்துத்துறைகளிலும் இந்த அரசாங்கம் கூடிய கரிசனை கொண்டுள்ளது.
நாட்டின் அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தலைமைத்துவம்தான் இவற்றுக்கெல்லாம் காரணம் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnt3.html

Geen opmerkingen:

Een reactie posten