[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 04:11.33 PM GMT ]
இலங்கை துறைமுக அதிகாரசபையின் கொம்பனித்தெரு நிலையம், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார காரியாலயமாக பயன்படுத்தப்படவிருந்தது என்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தநிலையத்துக்கு நேற்று கண்காணிப்புக்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சியினர் சென்ற போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
குறித்த நிலையம் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நிலையமாக பயன்படுத்தப்படவிருந்ததாக கிடைத்த தகவலை அடுத்தே ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு கண்காணிப்புக்காக சென்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்துள்ளார்.
இதன்போது சுமார் 50 அடி நீளமான பிரசார மேடை ஒன்றும் பாரிய தொலைக்காட்சி திரை ஒன்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சிறிய கட்அவுட்டுகளும் காணப்பட்டன.
இந்த பிரசார சாதனங்கள் யாவும் சுமார் 100 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியானவை என்று யோகராஜன் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் அரசாங்கம் அரச நிதியை தமது பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARWKWeu2.html
இலங்கை கடற்படை தளபதி இந்தியா பயணம்! தமிழக கட்சிகள் கண்டனம்
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 04:12.35 PM GMT ]
சீனா, இந்து சமுத்திரத்தில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுக்கும் முகமாகவே இந்தியா, இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தி வருகிறது.
இந்தநிலையிலேயே நாளை 23ம் திகதியன்று ஜெயந்த பெரேரா இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
இந்தியாவின் உதவிகளை பெற்றுக்கொள்ளும் முகமாகவே இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.
இந்தநிலையில் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இந்திய அரசாங்கம் செயற்படுகிறது என்று நாம் தமிழர் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இதற்கிடையில் இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்ள இந்தியா முயற்சிப்பது குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் டி கே எஸ் இளங்கோவன் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு நாட்டுடன் இந்தியா எவ்வாறு பாதுகாப்பு உடன்படிக்கையை மேற்கொள்ள முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARWKWeu3.html
சேனுகாவை காப்பாற்ற முயலும் ஜி எல் பீரிஸ் பதவிவிலக வேண்டும்!- ரவி கருணாநாயக்க
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 04:22.14 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் உதவி தலைவர் ரவி கருணாநாயக்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
சேனுகா செனவிரட்னவை காப்பாற்றுவதாக நினைத்து மக்களை பிழையான வழிக்கு இட்டுச்செல்லாமல் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று ரவி கருணாநாயக்க கேட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், உரையாற்றிய அவர், ஜெனீவாவில் தூதுவராக இருந்த போது சேனுகா இலங்கை தூதரக புனரமைப்பு பணிகளை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்று வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இது வேண்டுமென்றே சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு என்றும் சேனுகா மீது குற்றம் இல்லை என்றும் ஜி.எல். பீரிஸ் நேற்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை கண்டித்துள்ள ரவி கருணாநாயக்க, அமைச்சர் ஏன் சேனுகா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் இருந்து அவரை காப்பாற்ற முனைகிறார் என்று கேள்வி எழுப்பினார்.
அரசாங்கம் அரச பணியாளர்களுக்கு 5000 ரூபா சம்பள உயர்வை அறிவிக்கவுள்ளது- ரவி கருணாநாயக்க
எதிர்வரும் 25ஆம் திகதியன்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் அரச பணியாளர்களுக்கு 5000 ரூபா சம்பள உயர்வை அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இந்த எதிர்ப்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து பல்வேறு நிவாரணங்களையும் வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கவுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க கூறினார்.
பெற்றோலின் விலை 50 ரூபாவாலும் டீசல் 15 ரூபாவாலும் போக்குவரத்து கட்டணங்கள் 20வீதத்தாலும் குறைக்கப்படவுள்ளன.
இந்தநிலையில் இலங்கையின் அடுத்த ஆட்சியை அமைக்கவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி அரச பணியாளர்களுக்கு 10ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszARWKWeu4.html
தமிழர்களுக்கான பரிகார நீதிகோரும் கையெழுத்து போராட்ட பிரதி பிரித்தானியப் பிரதமர் அலுவலகத்திடம் கையளிப்பு!
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 04:26.02 PM GMT ]
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் மற்றும் பண்பாட்டு விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இக் கையெழுத்துப் சேகரிப்பு பிரதியில், நில அபகரிப்பு - ஆட்கடத்தல் சிங்களக் குடியேற்றம் உட்பட பல்வேறு வடிவங்கள் ஈழத் தமிழினத்தின் மீது தொடரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை தடுத்து நிறுத்தக் கோரியும், அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு பொதுநன வாக்கெடுப்பு நடத்தக் கோரியும் உள்ளடக்கப்பட்டிருந்ததது.
இதேவேளை பிரித்தானியாவில் இருந்து தமிழர்களை நாடுகடத்த வேண்டாம் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருந்தது.
கடந்த மே 12ம் நாள் முதல் சேகரிக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிநிதிகளின் முதற் தொகுதியினை இளையோர் மற்றும் பண்பாட்டு விவகாரங்களுக்கான துணை அமைச்சர் நிமலன் சீவரட்ணம் தலைமையில் இளையோர்கள் கையளித்திருந்தனர்.
இந்நாளில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன் அடையாள ரீதியான கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தனர்.
இந்த அடையாள ஒன்றுகூடலில் துணை நகரபிதா சுரேஸ் கிருஸ்ணா அவர்களும், Nation without States அமைப்பு பிரதிநிதிகள் Dr Jawad Mella , Ms.Doris Jones ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது தோழமையினைத் தெரிவித்திருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszARWKWeu5.html
Geen opmerkingen:
Een reactie posten