தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 oktober 2014

கிளிநொச்சி அக்கராயன், வன்னேரிக்குளங்களில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன!



கோண்டாவில் பிள்ளையார் ஆலயத்தின் கோபுர கலசத்தை களவாடிய மின்னல்
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 04:44.41 PM GMT ]
யாழ்.குடாநாட்டில் தொடர்ச்சியான கனமழை பெய்துவரும் நிலையில் இன்றைய தினம் யாழ்.கோண்டாவில் உப்புமடம் பிள்ளையார் ஆலயத்தின் கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியதில் கோபுரத்திலிருந்த சிலைகள் உடைந்து வீழ்ந்துள்ளதுடன், கோபுர கலசமும் காணாமல்போயுள்ளது.
கடந்த சில தினங்களாக யாழ்.குடாநாட்டில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் மாலை மேற்படி ஆலயத்தின் கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளது.
இதனால் கோபுரத்தில் இருந்து பிள்ளையார் சிலை உடைந்து கீழே வீழ்ந்துள்ளதுடன், கோபுரத்திலிருந்த கலசம் காணாமல்போயுள்ளது.
இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகத்தின் மக்களின் உதவியுடன் ஆலயத்தின் சுற்றுப் புறத்தில் தேடுதல் நடத்தியிருந்தனர். எனினும் கலசத்தை காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmr4.html

கிளிநொச்சி அக்கராயன், வன்னேரிக்குளங்களில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன!
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 05:02.55 PM GMT ]
கிளிநொச்சி மாவட்டத்தில் நன்னீர் மீன் வளர்ப்பினை ஊக்குவிக்கும் நோக்குடன் வடமாகாண மீன்பிடி அமைச்சினால் அக்கராயன் மற்றும் வன்னேரிக்குளம் ஆகியவற்றில் நன்னீர் மீன் குஞ்சுகள் நேற்றைய தினம் விடப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் மேற்படி இரு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்த மாகாண கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன், இரு குளங்களிலும் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மீன் குஞ்சுகளை விட்டார்.
நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் மக்கள் தங்கள் குறைகள் தொடர்பாகவும் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmr6.html

Geen opmerkingen:

Een reactie posten