தாய்லாந்தில் கடந்த 14ம் திகதி பிரித்தானியா யாமவுத்தை சேர்ந்த பெண் ஒருவரும், அவரது காதலனும் கொல்லப்பட்டார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகள் யார் என்று தெரியாமல் தாய்லாந்துப் பொலிசார் திணறினார்கள். தாய்லாந்து நாட்டை பொறுத்தவரை அவர்களது பாரிய வருமாணம் சுற்றுலாத்துறையில் தான் தங்கியுள்ளது. இன் நிலையில் பிரித்தானிய ஜோடி கொல்லப்பட்டது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் அன் நாட்டின் இராணுவத்தினரே களத்தில் இறங்கி கொலையாளிகளை தேடவேண்டிய சூழ் நிலை உருவாகியது. கொலை நடந்த சிறிது நேரத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பரபரப்பாகச் செல்லும் காட்சியை, வீதியோர CCTV கேமரா பதிவுசெய்தது. இதனை வைத்தே ஆரம்ப கட்ட விசாரணைகளை பொலிசாரும் இராணுவத்தினரும் ஆரம்பித்தார்கள்.
இறுதியில் நேற்றைய தினம்(02) 2 பேரை பொலிசார் கைதுசெய்தார்கள். அவர்கள் இருவரும் தாம் பிரித்தானிய ஜோடியைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்கள். இரவு நேரத்தில் கழியாட்ட விடுதியில் மது அருந்திவிட்டு, 23 வயதான டேவிட் மில்லர் என்பவரும், ஹன்னா ஏனும் 24 வயதுப் பெண்ணும் வெளியே சென்று நடந்துள்ளார்கள். அவர்கள் இருவரும் ஒரு மறைவான இடத்தில் உடலுறவில் ஈடுபட்டதாகவும், அதனைப் பார்த்த தாங்கள் மூவரும், டேவிட் மில்லரை கொலைசெய்துவிட்டு அப்பெண்ணை கற்பழிக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்கள். ஆனால் டேவிட் மில்லர் ஹன்னாவுடன் உடலுறவில் ஈடுபட்டார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், மாறாக தற்போது பிடிபட்டுள்ள 2 ஆசாமிகளின் டி.என்.ஏ மரபணுக்கள் அப்பெண்ணின் உடலில் காணப்படுவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
இச்செய்தியை நாம் எழுதிக்கொண்டு இருக்கும் வேளையில், மூன்றாவது நபரையும் கைதுசெய்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இருப்பினும் அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆகமொத்தத்தில், டேவிட் மில்லரை கொலைசெய்துவிட்டு ஹன்னாவை கற்பழித்து பின்னர் அவரையும் கொலைசெய்துள்ளார்கள் இந்த மூவர். இவர்கள் தாய்லாந்து நாட்டவர்கள் அல்ல என்றும், பர்மாவில் இருந்து தாய்லாந்தில் வந்து வேலைசெய்யும் குடியேறிகள் என்றும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1137.html
Geen opmerkingen:
Een reactie posten