தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 oktober 2014

பெண்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இராணுவத்தில் இருந்து தப்பிய கோப்ரல் கைது (செய்தித் துளிகள்) !

இராணுவத்தில் இருந்து தப்பியோடிய கோப்ரல் ஒருவர் இங்கிரிய பிரதேசத்திற்கு சென்று ஆலய பூசகராக தன்னை இனங்காட்டி தோஷங்களை நிவர்த்திக்க சென்றபெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
இங்கிரிய பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்த இந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளார்.
இராணுவத்தில் இருந்து தப்பியோடிய இந்த கோப்ரல், மந்திர தந்திரங்கள் தொடர்பான புத்தகங்களை படித்து, சோதிடங்களை கற்று ஆலயத்திற்கு சென்று புதுவிதமான தோஷ நிவர்த்தி பூசைகளை நடத்தியுள்ளார்.
வயிற்றில் கட்டி இருக்கும் பெண்ணொருவர், இவரிடம் பூசைக்காக வந்துள்ளார். அந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் பிள்ளைகள் இருக்கும் பெண்ணொருவருடன் பிரதேசத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.
மேலும் பல பெண்கள் இந்த நபரினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் வெட்கம் காரணமாக அவர்கள் இதனை வெளியில் கூற அச்சப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இங்கிரிய பொலிஸ் நிலையத்தில் இது சம்பந்தமாக இரண்டு முறைப்பாடுகள் மாத்திரமே கிடைத்துள்ளன.
சந்தேக நபரின் தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார், பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரை பயன்படுத்தி, தோஷ நிர்வத்தி பூசை செய்ய வேண்டும் என தெரிவித்து சந்தேக நபரை கடுவலை பிரதேசத்திற்கு வரவழைத்து நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் நோர்ட்டன் பிரிஜ் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போலி விசா தயாரித்தவர் கைது
குவைத் நாட்டிற்கு செல்வதற்காக போலி விசா தயாரித்த ஒருவர் ஆனமடுவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொலைபேசி அழைப்பு மூலம் கிடைத்த தகவலொன்றின் பிரகாரம் சந்தேகநபர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று பிற்பகல் ககைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
ஆனமடுவை பகுதியை சேர்ந்த 36 வயதான ஒருவரே போலி விசா தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
சந்தேகநபரை​ நீர்கொழும்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவு பொலிஸார் சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தேகொட இராணுவ முகாம் வெடிப்புச் சம்பவம் குறித்து இராணுவ நீதிமன்றின் ஊடாக விசாரணை
மத்தேகொட இராணுவ முகாமில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சமப்வம் தொடர்பில் இராணுவ நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்பட உள்ளது.
மேல்மாகாணம் கெட்டாவ மத்தேகொட என்னும் இடத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமின் வெடிபொருள் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் முகாமில் தீப்பற்றிக்கொண்டது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க இராணுவ நீதிமன்மொன்றை நியமித்துள்ளார்.
இராணுவ பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
வெடிப்புச் சம்பவம் குறித்து முழு அளவில் விசாரணை நடத்துமாறு இராணுவத்தளபதி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தினால் உயிர் அல்லது உடமைச் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
வவுனியா மாமடு பிரதேசத்தில் புதையல் தோண்டிய மூவர் கைது
வவுனியா மாமடு குளத்திற்கு அருகில் உள்ள பாறை பகுதியில் புதையல் தோண்டிய மூன்று பேர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் வீதி புனரமைப்பு பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள், அனுராதபுரம், கல்கிரியாகம, கெக்கிராவ போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர்களிடம் இருந்து புதையல் தோண்ட பயன்படுத்தப்பட்ட ஆயுத உபகரணங்கள் மற்றும் பூசை பொருட்கள் என்பவற்றையும் வவுனியா பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
போலி நாணயங்களுடன் உயிலங்குளத்தில் ஒருவர் கைது
போலி ரூபா நாணயத் தாள்களுடன் ஒருவர் மன்னார் உயிலங்குளம் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை தாம் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
26 வயதான இந்த நபர் அடம்பன் பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் போலி நாணயத்தாளை கொடுத்து மதுபான போத்தல் ஒன்றை கொள்வனவு செய்ய முயஙற்சித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த மேலும் மூன்று போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVeo1.html

Geen opmerkingen:

Een reactie posten