[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 09:28.45 AM GMT ]
கொழும்பு ஊடகம் ஒன்றிடம் இன்று காலை அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் இருந்த பிரிவினைவாதத்தை தோற்கடிக்க ஜாதிக ஹெல உறுமய நடவடிக்கை எடுத்தது.
அந்த வெற்றியை தக்கவைத்து கொள்ள முடியாமல் போனது கவலைக்குரிய விடயம்.
ஜாதிக ஹெல உறுமய போன்று கட்சியின் தலைவரோ அல்லது தலைவர்களோ இப்படியான யோசனைகளை முன்வைத்து அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அரசுக்கெதிராக கலகம் செய்தாலும் ரத்ன தேரர் ஆதரவு எங்களுக்கே! டிலான் பெரேரா
அரசுக்கெதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் ரத்ன தேரர், அரசாங்கத்துக்கே தொடர்ந்தும் ஆதரவளிப்பார் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் இன்று அதிகாலை கொழும்பு டுடே செய்திச் சேவையுடன் தொலைபேசி வழியாக கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு ஆதரவான வாக்குகள் குறைந்துள்ளது உண்மைதான். அதேபோன்று ஐ.தே.க.வுக்கும் வாக்குகள் குறைந்துள்ளது. வடக்கில் ஐ.தே.க.வுக்கு சுத்தமாக வாக்குகள் கிடையாது.
அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலிடத்திலும், அரசாங்கம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. ஆக வாக்குகள் குறைந்திருப்பது எதிர்க்கட்சிக்குத்தான் பாதகமாக இருக்கும். எந்தவொரு அரசாங்கத்திலும் இருக்கும் பங்காளிக்கட்சிகள் எப்போதும் அதிக பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கூப்பாடு போடுவது வழமையானது.
அதன் மூலமே அவர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் விமல் வீரவங்ச புத்திசாலித்தனமாக முடிவெடுத்து, அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.
அதேபோன்று ஹெல உறுமயவும் இப்போது சிற்சில பிரச்சினைகளை முன்வைத்து கருத்துக்களை வெளியிடுகின்றது. அதன் முக்கியஸ்தர் ரத்ன தேரர் பரபரப்பான கருத்துக்களை வெளியிடுகின்றார்.
ஆனாலும் அவர் ஜனாதிபதி மஹிந்தவின் ஆதரவாளர். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் இந்த அரசாங்கம் தவிர வேறு யாருக்கும் ஆதரவளிக்க மாட்டார் என்றும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKXno3.html
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் ஊடாக மாற்றங்கள் இல்லை என்பதால், இடதுசாரிகள் ஊடாக மாற்றத்தை ஏற்படுத்த எண்ணியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டில் இருந்த பிரிவினைவாதத்தை தோற்கடிக்க ஜாதிக ஹெல உறுமய நடவடிக்கை எடுத்தது.
அந்த வெற்றியை தக்கவைத்து கொள்ள முடியாமல் போனது கவலைக்குரிய விடயம்.
ஜாதிக ஹெல உறுமய போன்று கட்சியின் தலைவரோ அல்லது தலைவர்களோ இப்படியான யோசனைகளை முன்வைத்து அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அரசுக்கெதிராக கலகம் செய்தாலும் ரத்ன தேரர் ஆதரவு எங்களுக்கே! டிலான் பெரேரா
அரசுக்கெதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் ரத்ன தேரர், அரசாங்கத்துக்கே தொடர்ந்தும் ஆதரவளிப்பார் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலை தொடர்பில் இன்று அதிகாலை கொழும்பு டுடே செய்திச் சேவையுடன் தொலைபேசி வழியாக கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு ஆதரவான வாக்குகள் குறைந்துள்ளது உண்மைதான். அதேபோன்று ஐ.தே.க.வுக்கும் வாக்குகள் குறைந்துள்ளது. வடக்கில் ஐ.தே.க.வுக்கு சுத்தமாக வாக்குகள் கிடையாது.
அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலிடத்திலும், அரசாங்கம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. ஆக வாக்குகள் குறைந்திருப்பது எதிர்க்கட்சிக்குத்தான் பாதகமாக இருக்கும். எந்தவொரு அரசாங்கத்திலும் இருக்கும் பங்காளிக்கட்சிகள் எப்போதும் அதிக பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கூப்பாடு போடுவது வழமையானது.
அதன் மூலமே அவர்கள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் விமல் வீரவங்ச புத்திசாலித்தனமாக முடிவெடுத்து, அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.
அதேபோன்று ஹெல உறுமயவும் இப்போது சிற்சில பிரச்சினைகளை முன்வைத்து கருத்துக்களை வெளியிடுகின்றது. அதன் முக்கியஸ்தர் ரத்ன தேரர் பரபரப்பான கருத்துக்களை வெளியிடுகின்றார்.
ஆனாலும் அவர் ஜனாதிபதி மஹிந்தவின் ஆதரவாளர். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் இந்த அரசாங்கம் தவிர வேறு யாருக்கும் ஆதரவளிக்க மாட்டார் என்றும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKXno3.html
முன்னிலை சோசலிசக் கட்சியின் மாற்றுக் கொள்கை- சட்டவிரோத ஜனாதிபதித் தேர்தலை நடத்தவேண்டாம்! ஜே.வி.பி. கோரிக்கை
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 09:35.26 AM GMT ]
இந்த மாற்றத்தை வலுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாக பங்களிப்பை வழங்கி செயற்பட போவதாகவும் அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில் சகல இடதுசாரி கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி இடதுசாரிகளின் பொது வேட்பாளர் ஒருவர் தேர்தலில் நிறுத்தப்படுவார் என அந்த கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சட்டவிரோத ஜனாதிபதித் தேர்தலை நடத்தவேண்டாம்! ஜே.வி.பி. கோரிக்கை
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சட்டவிரோதமானது என்றும், அதனை நடத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணையாளரிடம் ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இன்று தேர்தல்கள் ஆணையாளரைச் சந்தித்த ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர்கள் கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சட்டவிரோமான முறையில் நடத்தப்பட இருப்பதால், வேட்புமனுத்தாக்கல் ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது என்றும் ஜே.வி.பி. முக்கியஸ்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பில் சாதகமாகப் பரிசீலனை செய்வதாக தேர்தல்கள் ஆணையாளர் தேசப்பிரிய உறுதியளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தேர்தல்கள் ஆணையாளர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளும் இன்று மாலை தேர்தல்கள் ஆணையாளரைச் சந்தித்து உரையாடவுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாகவே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKXno4.html
நானும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனும், கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் நீச்சலடித்து குளித்து ஜலக்கிரீடை செய்தோம் என கடந்த 2010ம் வருட ஜனாதிபதி தேர்தலின் போது நாடு முழுக்க சென்று பொய் பிரச்சாரம் செய்தவர்தான் விமல் வீரவன்ச.
இதனடிப்படையில் சகல இடதுசாரி கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி இடதுசாரிகளின் பொது வேட்பாளர் ஒருவர் தேர்தலில் நிறுத்தப்படுவார் என அந்த கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சட்டவிரோத ஜனாதிபதித் தேர்தலை நடத்தவேண்டாம்! ஜே.வி.பி. கோரிக்கை
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் சட்டவிரோதமானது என்றும், அதனை நடத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணையாளரிடம் ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இன்று தேர்தல்கள் ஆணையாளரைச் சந்தித்த ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர்கள் கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சட்டவிரோமான முறையில் நடத்தப்பட இருப்பதால், வேட்புமனுத்தாக்கல் ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது என்றும் ஜே.வி.பி. முக்கியஸ்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பில் சாதகமாகப் பரிசீலனை செய்வதாக தேர்தல்கள் ஆணையாளர் தேசப்பிரிய உறுதியளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தேர்தல்கள் ஆணையாளர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளும் இன்று மாலை தேர்தல்கள் ஆணையாளரைச் சந்தித்து உரையாடவுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாகவே இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKXno4.html
அரசாங்கத்தின் புலி பருப்பு இம்முறை வேகாது: மனோ கணேசன்
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 09:55.22 AM GMT ]
அத்தகைய ஒரு சீடி குறுவெட்டு புலிகளின் அலுவலகத்தில் இருந்து இராணுவத்தால் கைப்பற்றபட்டது என்றும், அது தற்போது தன்வசம் இருக்கின்றது என்றும் அவர் அப்போது சொன்னார் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
அதன்பிறகு பாராளுமன்றத்தில் அவரை கண்டு நான் அந்த சீடி குறுவெட்டை எனக்கும் காட்டும்படி கேட்டேன். நான் எப்படி நீச்சல் அடித்தேன் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று அவரிடம் சொன்னேன்.
ஆனால், கடைசிவரை அப்படி ஒரு குறுவெட்டை எனக்கு அவர் காட்டவில்லை. அப்படி ஒரு சீடி இருக்குமானால், நான் அரசியலில் இருந்தே விலகி விடுகின்றேன் என நான் அதன்பிறகு பலமுறை கூறியுள்ளேன்.
இப்போதும் அதை நான் அவரிடம் கேட்கின்றேன். ஆனால், இதுவரையில் விமல் வீரவன்ச எனக்கு அந்த சீடியை காட்டவில்லை. இவர் ஒரு பொய்யர்.
கீழ்த்தரமான அரசியல் தேவைகளுக்காக, புனையப்பட்ட கதைகளை பகிரங்கமாக வெட்கமில்லாமல் சொல்கின்றவர். தான் ஒரு கேவலமான பொய்க்காரன் இல்லை என்றால் அவர் இப்போதாவது அந்த சீடியை எனக்கும், நாட்டு மக்களுக்கும் காட்ட வேண்டும். இப்போதும் நான் அவருக்கு சவால் விடுக்கிறேன்.
அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து இருந்தால் நான் அதை பகிரங்கமாக சொல்வேன். ஆனால் அப்படி சம்பவம் ஒருபோதும் நிகழவில்லை என்பது எனக்கு தெரியும்.
இப்போது இதே விமல் வீரவன்சதான், இந்த ஆட்சியின் சார்பாக, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் புலிக்கதைகளை அவிழ்த்துவிட்டு பொய் சொல்லும் பணியை தலைமை தாங்கி நடத்த நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த பொய்யரின் கதைகளை நம்பி ஏமாற இந்தமுறை சிங்கள மக்கள் தயாராக இல்லை.
இன்று இந்த அரசாங்கத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவராக, புலிகளின் தலைவர் பிரபாகரன் மாறியுள்ளார் என்று தோன்றுகிறது. அவரது பெயரை ஒரு நாளைக்கு நூறுமுறை உச்சரித்து, இந்த அரசின் ஆட்கள் பொய் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் நீதிமன்ற இடைக்கால தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் புலிகளின் மீதான தடை நீக்கப்படவில்லை. 28 நாடுகளை கொண்ட இந்த ஒன்றிய உறுப்பு நாடுகளை புலித்தடை தொடர்பாக ஆவணங்களை முன்வைக்கும்படி நீதிமன்றம் கோரியுள்ளது.
இதை வைத்து கொண்டுதான் இவர்கள் இங்கே இப்போது அரசியல் செய்கிறார்கள். இந்த தீர்ப்புக்கும், எதிர்க்கட்சிகளுக்கும், ரணில் விக்கரமசிங்கவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள். இப்படி பொய்களை உருவாக்கி சொல்லும் குழுவின் தலைவர்தான் விமல் வீரவன்ச.
இதற்கு ஒரு காரணம் உள்ளது. இந்த ஆட்சி தேர்தலில் மக்கள் முன்னால் சென்று, நல்லாட்சியை பற்றியோ, மனித உரிமைகளை பற்றியோ, ஊடக சுதந்திரத்தை பற்றியோ, ஊழல் ஒழிப்பு பற்றியோ பேச முடியாது. இவர்களிடம் எஞ்சி இருப்பதெல்லாம், புனையப்பட்ட புலிக்கதைகள் மாத்திரமே.
ஆகவேதான், இன்று இந்த அரசாங்கத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவராக, புலிகளின் தலைவர் பிரபாகரன் மாறியுள்ளார் என்று கூறுகிறேன். ஆனால், இந்த முறை இந்த புலி பருப்பு வேகாது.
http://www.tamilwin.com/show-RUmszARXKXno5.html

Geen opmerkingen:
Een reactie posten