[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 05:37.04 AM GMT ]
பயங்கரவாத செயற்பாடுகள் அரச விரோத நடவடிக்கைகளையே சுற்றி வளைப்பது பாதுகாப்பு பிரிவின் கடமை இதில் சிவில் பிரஜைகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. இனவாதத்தை தூண்டுவது போன்ற செயற்பாடுகளில் யாராவது செயற்படுகின்றனரா என்பதில் நாங்கள் இன்னும் விழிப்பாக இருக்கின்றோம்.
மாற்று சிந்தனைக் கொண்ட பூசகர் ஒருவர் இனவாதத்தை தூண்டும் வகையில் எழுதிய கவிதை புத்தகத்தை வடபகுதி பாடசாலைகளுக்கு விநியோகிக்க வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலர் அரசை கோரியுள்ளனர்.
படையினர் இந்த பிரதேசத்தில் பாரிய சமாதானம் மற்றும் ஒருமைப்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் பாதுகாப்பு படையினரை இந்தப்பகுதியிலிருந்து வெளியேற்ற கூட்டமைப்பு கோரிக்கை வைக்கின்றனர் ஆனால் வடக்கில் படையினர் தொடர்ந்து இருக்கவே மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் தெரிவிக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnw1.html
விசாரணை அமர்வுகளை பார்வையிட நிபுணர் குழு விரும்பவில்லை என்கிறார் பரணகம!
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 06:47.06 AM GMT ]
ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
எமது ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவில் மூன்று பேரை நான் கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.
குறிப்பாக சேர் டெஸ்மன்ட் டீ. சில்வா மற்றும் இந்தியா பாகிஸ்தான் நாடுகளிலிருந்து நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளையே நான் அண்மையி்ல் சந்தித்து பேச்சு நடத்தினேன்.
இதன்போது உள்ளக விசாரணை செயற்பாட்டுடன் தொடர்புபடுகின்ற சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் என்பனவை தொடர்பாக கலந்துரையாடினோம்.
எந்த நேரத்திலும் தங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தாங்கள் ஆலோசனை வழங்க தயாராக இருப்பதாகவும் சந்திப்பின் போது நிபுணர் குழுவினர் என்னிடம் கூறினர்.
எமது ஆணைக்குழு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்தும் செயன்முறையை நிபுணர் குழுவுக்கு எடுத்துக் கூறினோம். அது தொடர்பில் அவர்கள் திருப்தியடைந்தனர்.
ஆனால் சர்வதேச நிபுணர் குழுவினர் எமது ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணை அமர்வுகளை பார்வையிட விரும்பவில்லை. காரணம் தமக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மீறி செல்வதற்கு தயாரில்லை என்று அவர்கள் கூறினர்.
ஆனால் ஒரு அமர்வையாவது வந்து பார்வையிடுமாறு நான் கோரிக்கை விடுத்தேன். அது தொடர்பில் எதிர்காலத்தில் பரிசீலிப்பதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnw5.html
Geen opmerkingen:
Een reactie posten