தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 oktober 2014

பொலிஸாருடன் வாக்குவாதம்: துவாரகேஸ்வரன் யாழில் கைது

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு: முன்னாள் அரச வழக்கறிஞர் ஆச்சார்யா
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 06:53.43 AM GMT ]
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி சந்திரசேகர் முன்பு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக, சொத்து குவிப்பு வழக்கில் பவானி சிங்குக்கு முன்பு அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகி வாதாடிய ஆச்சார்யா கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,
சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு சார்பில் நான் ஆஜராகி வந்தேன். எனக்கு பல்வேறு இடங்களில் இருந்து நெருக்கடி அதிகமாக வந்தது. வேறு வழியில்லாமல் நான் அந்த பதவியில் இருந்து விலகினேன்.
தமிழ்நாட்டில் இந்த வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்ற காரணத்தால் தான் உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றியது.
அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரத்தையும் கர்நாடக அரசுக்கு வழங்கியது. ஆனால் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
அதன்படி வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதில் எனக்கு முக்கிய பங்கு உள்ளது என்று நான் சொல்ல மாட்டேன். சட்டப்படி அது நடைபெற்று முடிந்து உள்ளது. குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளனர்.
இதுபோன்ற வழக்குகளில் 5 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால், அந்த தண்டனையை நிறுத்தி வைத்து அவர்களை ஜாமீனில் விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. அதன்படி குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnw6.html

காலியில் மகிந்தவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 06:56.23 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஓய்வு பெற்ற ஊழியர்கள்,  காலி பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன் இன்று ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர்.
2005ம் ஆண்டு வெளியிடப்பட்ட மகிந்த சிந்தனை மற்றும் 2010ம் ஆண்டு வெளியிடப்பட்ட மகிந்த சிந்தனை எதிர்கால நோக்கு ஆகியவற்றில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.
வாக்குறுதிகளை வசனத்தில் மட்டுப்படுத்தாது செய்கையில் காட்டுமாறும், ஓய்வூதிய சம்பள பிரச்சினை, வாழ்க்கை செலவை மீளப்பெற்றுக் கொடுத்தல்,நிலையான ஓய்வூதியம் கொடுப்பனவு கொள்கை உட்பட பல பிரச்சினைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500 இற்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnw7.html
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 07:06.03 AM GMT ]
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மக்களுக்கு இழப்பீடு வழங்னவென அரசாங்கம் இவ்வருடம் 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யுத்தத்தின் போது கை,கால்கள் இழந்த மற்றும் வீடு, சொத்துக்களை இழந்த பொது மக்களுக்கு இவ்வாறு இழப்பீடு வழங்கப்படுவதாக திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீட்டுத் திட்டத்தை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக வட பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி கிளிநொச்சி - இரனைமடு பகுதியில் இழப்பீடு வழங்கும் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாகவும் அதன்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு 130 மில்லியன் இழப்பீடு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 100 இடங்களை புனரமைப்புச் செய்யும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் கண்காணிப்பில் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnxy.html
பொலிஸாருடன் வாக்குவாதம்: துவாரகேஸ்வரன் யாழில் கைது
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 07:07.44 AM GMT ]
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் சகோதரரான துவாரகேஸ்வரன் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு நல்லூர் செட்டித்தெரு வீதியில் வைத்து இவரைக் கைது செய்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது, யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவரை, நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பஸ் சேவையில் ஈடுபடும் பஸ்ஸின் வழித்தடலினை பொலிஸார் பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது, பொலிஸாருடன் துவாரகேஸ்வரன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்தே இவர் கைது செய்யப்பட்டதாக யாழ். பொலிஸார் குறிப்பிட்டனர்.

http://www.tamilwin.com/show-RUmszATaKWnxz.html

Geen opmerkingen:

Een reactie posten