[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 11:15.17 AM GMT ]
கனடாவில் தடை செய்யப்பட்ட இயங்கங்களான தமிழீழ விடுதலைப் புலிகளுடனோ அல்லது உலகத் தமிழர் இயக்கத்துடனோ தொடர்பைப் பேணினால் அது தண்டனைக்குரிய குற்றம் என கனடிய அரசின் முக்கிய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
கனடாவின் சார்பில் இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டவரும், கனடிய வெளிவிவகார அமைச்சின் செயலரும், கனடியப் பாதுகாப்பு கட்டமைப்பின் உறுப்பினருமான கௌரவ டீபக் ஒபராய் இது குறித்து செய்தியாளருக்குத் தெரிவித்த கருத்தில்,
கனடாவில் விடுதலைப் புலிகள் அமைப்பும் உலகத் தமிழர் இயக்கமும் பயங்கரவாத இயக்கங்களாகத் தடை செய்யப்பட்டிருக்கின்றன.
அவற்றுடன் தொடர்பு கொள்வது தண்டனைக்குரிய குற்றம். யாராவது தமது அறிவுக் கெட்டிய வகையில் தடை செய்யப்பட்ட இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணினால் அவர்கள் கனடியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
அவ்வாறு யாராவது விடுதலைப் புலிகளுடனோ அல்லது உலகத்தமிழர் இயக்கத்துடனோ தொடர்புடைய செயற்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒருவருக்குத் தெரிந்தால் அவர் அதனை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிற்கு அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு கனடிய பொதுமக்கள் பாதுகாப்பமைச்சின் இணையத் தள விளக்கங்களையும் [http://www.publicsafety.gc.ca/cnt/ntnl-scrt/cntr-trrrsm/lstd-ntts/index-eng.aspx ] கருத்திலெடுக்க வேண்டுமெனவும், ஒருவர் தனது சுய அறிவுக்கு எட்டிய வகையில் இந்த அமைப்புக்களின் எந்தவொரு செயற்பாடுகளிலும் நேரடியாகவோ மறைமுகமாவோ ஈடுபடுகிறார் அல்லது அவ்வாறானதொரு நடவடிக்கைக்குப் மறைமுகமாக ஒத்தாசை புரிகிறார் “knowingly participate in or contribute to, directly or indirectly, any activity of a terrorist group.” என்பது கூட குற்றமாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகை நிருபர் ஒருவருக்கு இது தொடர்பாக டீபக் ஒபராய் தெரிவித்த கருத்துக்கள் குறித்து வினவிய போதே மேற்கண்ட தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் இறுதிப் போரில் இரு தரப்பும் மேற்கொண்ட பொதுமக்களிற்கெதிரான தாக்குதல்கள் விசாரிக்கப்பட வேண்டும், இலங்கை அரசு மீள்குடியேற்ற, புனர்வாழ்வு விவகாரங்களில் பாராபட்சம் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டுக்களுடன் இறுதிப் போரின் போதான குற்றங்கள் பற்றிய சுயாதீன விசாரணைக்காகக் மிகவும் காத்திரமாக கனடா செயற்பட்ட வருகிறது.
அதேவேளை இந்த ஆண்டு கனடாவில் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள (The Justice for Victim of Terrorism Act.) சட்ட வரைவாக்கத்தின் படி, 1985ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதிக்கு பின்னர் எந்தவொரு பயங்கரவாத அமைப்பாலும் அல்லது பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கிறது எனப் பட்டியலிடப்பட்ட நாட்டினாலும் தமக்கு ஏற்பட்ட பாதிப்புக்களிற்கான, சொத்து ஈழப்பீட்டிற்கான, உயிர் இழப்பீட்டிற்கான வழக்குகளை தடை செய்யப்பட்ட நாடுகள், அமைப்புக்களின் மீது கனடாவில் பதியலாம் என்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளில் பங்கேற்றார்கள், துணை போனார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஒருவர் ஆகக்கூடியது 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன், தண்டனையின் பின்னான காலத்தில் கண்காணிப்புக் உட்படுத்தப்படும் நிலை தொடராலம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடிய உள்ளூராட்சித் தேர்தல்: 30க்கு மேற்பட்ட தமிழர்கள் போட்டி
http://www.tamilwin.com/show-RUmszARYKXnu2.html
இதனால் தமிழருக்கு என்னப்பா சங்கடம்,புலி ஆதரவாளருக்கு மட்டுமே சங்கடம்!!தமிழரெல்லாம் புலிகள் என்கிறார்களா இதை எழுதியோர்!??இல்லை என்றனரே 2009இல் புலிகள்!!யார் சொல்வதை நம்ப??!!
Geen opmerkingen:
Een reactie posten