தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 oktober 2014

"கியூ" பிரிவு பொலிசார் துரத்த ஓடி மறைந்த இலங்கை நபர்கள்: படகு தான் மிச்சம், நடந்தது என்ன ?

இலங்கைப் பெண்ணை மணந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் வைத்து கைது !

[ Oct 05, 2014 07:06:49 AM | வாசித்தோர் : 7185 ]
போதைப் பொருட்களை இந்தியா, இலங்கை மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு நீண்ட நாட்களாக கடத்தி வந்த கடத்தல் மன்னன் சென்னை விமான நிலையத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். முன்னதாக டெல்லியில் இருந்து மைதீன் என்னும் நபர் 1 KG எடையுள்ள ஹெரேயினை ரயில் வழியாக எடுத்துக்கொண்டு சென்னை வந்துள்ளார். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் , அவரை அதிரடியாக தமிழக பொலிசார் கைதுசெய்தார்கள். மைதீனை விசாரித்த பொலிசாருக்கு மேலதிக அதிர்சி காத்திருந்தது. மைதீன வேலைசெய்வது கான் எனப்படும் ஒரு நபருக்கான என்று பொலிசார் அறிந்துகொண்டார்கள்.
சர்வதேச அளவில் தேடப்படும் இன் நபர், இலங்கைப் பெண் ஒருவரை மணந்து இலங்கை கடவுச் சீட்டை வைத்துள்ளார். அவர் 4ம் திகதி சென்னையில் இருந்து கொழும்பு செல்ல இருக்கிறார் என்று அகப்பட்ட மைதீன் பொலிசாருக்கு தகவல் சொல்லியுள்ளார். இதனை அடுத்து கானைப் பிடிக்க பொலிசார் மாறுவேடத்தில் சென்னை விமான நிலையத்தினுள் புகுந்துள்ளார்கள். கான் ஸ்ரீலங்கன் ஏர் வேஸ் மூலம் கொழும்பு செல்ல இருந்தவேளை அவரை தமிழக பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
http://www.athirvu.com/newsdetail/1156.html

"கியூ" பிரிவு பொலிசார் துரத்த ஓடி மறைந்த இலங்கை நபர்கள்: படகு தான் மிச்சம், நடந்தது என்ன ?

[ Oct 05, 2014 07:29:40 AM | வாசித்தோர் : 9850 ]
தமிழகத்தின் கரையோரப் பகுதியான தங்கச்சி மடம் பகுதியில் வந்து இறங்குய இலங்கை நபர்களை கியூ பிரிவு பொலிசார் துரத்தியுள்ளார்கள். ஆனால் அவர்கள் இருவரும் மாட்டிக்கொள்ளாது சாமர்த்தியமாக தப்பியோடியுள்ளார்கள். குறித்த சம்பவம் நேற்றைய தினம்(04) தங்கச்சி மடம் பகுதியில் நிகழ்ந்துள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இலங்கையில் இருந்து நார் படகு மூலம் இருவர் தங்கச்சி மடம் என்னும் பகுதிக்குள் வந்துள்ளார்கள். இவர்கள் நடமாட்டம் சற்று வித்தியாசமாக இருந்ததால் அப்பகுதியில் உள்ள மக்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். படகில் வந்து இறங்கிய நபர்கள் உடனடியாகவே தொலைபேசியை எடுத்து பேசியுள்ளார்கள்.
பொலிசார் கியூ பிரிவினருக்கு தகவல் வழங்க , ரகசியமாக அங்கே கியூ பிரிவு பொலிசார் வந்துள்ளார்கள். அவர்கள் கடல்கரையை வந்தடையும் வரை அந்த 2 இளைஞர்களும் அங்கே தான் இருந்துள்ளார்கள். ஆனால் ஏதோ ஒரு வகையில் அவர்கள் இருவரும் கியூ பிரிவு பொலிசார் தங்களை சுற்றிவளைப்பதை உணர்ந்து விட்டார்கள். உடனே கியூ பிரிவு பொலிசார் முன்பாகவே அவர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டார்கள் என்று பொது மக்கள் தெரிவித்துள்ளார்கள். பொலிசார் அவர்கள் இலங்கையில் இருந்து தமிழகம் வந்த நார் படகை மட்டுமே கைப்பற்றி உள்ளார்கள். அதில் எதுவும் இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது தமிழகப் பொலிசாரின் சோடினையாகக் கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும், தமிழ் நாட்டில் அன்னிய சக்திகள் ஊடுருவல் அதிகரித்துள்ளது என்று கூறியும் மத்திய அரசின் ஆட்சியைக் கொண்டுவர ப.ஜ.க முனைவதாகவும் ஒரு பேச்சு உள்ளது
http://www.athirvu.com/newsdetail/1157.html

Geen opmerkingen:

Een reactie posten