தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 oktober 2014

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பதற்றம்! எஸ்.பி.யுடன் மாணவர்கள் வாக்குவாதம்!!



இரட்டை குடியுரிமை வழங்கும் நடைமுறை விரைவில் அமுல் (செய்தித் துளிகள்)
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 04:19.09 AM GMT ]
இரட்டை குடியுரிமை வழங்கும் நடைமுறை விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இத்தாலியில் நேற்று தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இரட்டை குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகள் அமுலுக்குக் கொண்டு வர எதிர்பார்க்கின்றோம்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வெளிநாடுகளிலிருந்து ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளத் தேவையான சட்டங்கள் உருவாக்கப்படும்.
போரின் பின்னர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரையில் பயணிக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இத்தாலி மிலானோ நகரின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மீனவர் தினத்தை கோலாகலமாக கொண்டாட திட்டம்
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு, தேசிய மீனவர் மகா சம்மேளனம், கடற்றொழில் திணைக்களம், நெக்டா மற்றும் ஏனைய ஒன்றிணைந்த நிறுவனங்கள் இணைந்து நவம்பர் 21 ஆம் திகதி சர்வதேச மீனவர் தினத்தை கோலாகலமாகக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கமைய மீன்பிடித்துறையில் பல்வேறு ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் முகமாக பல்வேறு திறமையுள்ள மீனவர் சமுதாய மாணவர்களிடையே கட்டுரை, நிர்மாணம், சித்திரம் மற்றும் பாடல் போட்டிகளை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கனிஷ்ட பிரிவில் 14 வயதிற்குக் கீழ்ப்பட்ட மாணவர்களும், சிரேஷ்ட பிரிவில் 14 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களும் இப்போட்டிகளில் கலந்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய உலகிற்கு ஏற்ற மீனவர் சமூகம், சமுத்திரத்தை வெற்றிகொள்பவர்கள், சமுத்திரத்தையும் கடற்கரையையும் பாதுகாப்போம், அழிவுக்குள்ளாகும் மீன்பிடி முறைமையினை ஒழிப்போம், பாரம்பரிய மீன்பிடி முறைமைகள், இலங்கை நீர் நிலைகளின் அழகுக் காட்சி, இலங்கை குளக்கரைகளின் அழகுக் காட்சி, சிறு சூறாவளி ஆகிய தலைப்டபுக்களில் கட்டுரை, நிர்மாணம், சித்திரம் மற்றும் பாடல் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இதனோடு 18 வயதிற்கு மேற்பட்ட வயது வந்தவர்களுக்கான போட்டிகளும், திறந்த போட்டிகளும் இடம்பெறவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அந்தந்த மாவட்டத்திலுள்ள அனைத்து மீன்பிடித் திணைக்கத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்களையும் மாவட்ட மற்றும் கிராமிய மீனவர் அமைப்புக்களுக்கு தகவல் அறிவித்து மீனவர் சமுதாய மாணவர்களை இப்போட்டியில் கலந்து கொள்ள ஊக்கமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பெறுமதிவாய்ந்த பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக தேசிய மீனவர் மகா சம்மேளனத்தின் செயலாளரும், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான எம்.பி.பிறேமசிரி பெரேரா தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்கள் 29பேர் சித்தி
ஐந்தாம் தர புலமைப் பரீட்சைகள் முடிவில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் 29 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
செல்வி.சிவானந்தம் அம்ரிதா 176 புள்ளிகளைப் பெற்று பாடசாலை மட்டத்தில் இரண்டாவது இடத்தினையும், மாணவி செல்வி.ஜெகதீஸ்வரன் அக்ஷித்தா 158 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இவர்களில் சிவானந்தம் சுரேந்தினி ஆகியோரின் புதல்வியான சி.அம்ரிதாவுக்கும், க.ஜெகதீஸ்வரன் மற்றும் ஸோபனா ஆகியோரின் புதல்வியான க.அக்ஷித்தா ஆகியோருக்கும், சித்தி பெற்ற ஏனைய மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.
இம்முறை புலமைப் பரீட்சையின் வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் இருந்து 29 மாணவர்கள் சித்தி பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.ஜெயஜீவன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnr0.html
இத்தாலி சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த இன்று நாடு திரும்பினார்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 06:32.43 AM GMT ]
இத்தாலி மற்றும் வத்திகான் நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார்.
ஜனாதிபதியுடன் சென்றிருந்த பிரதிநிதிகளும் நாடு திரும்பியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
புனித பாப்பரசர் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதுடன் அதற்கான உத்தியோகபூர்வ அழைப்பை விடுப்பதற்காக ஜனாதிபதி வத்திகான் சென்றிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnr1.html
இலங்கையின் அடுத்த பிரதமர் சஜித் பிரேமதாச!: ஹரின் நம்பிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 06:35.12 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவே பிரதமர் என ஊவா மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகார சபை கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற யோசனையை தான் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்க உள்ளதாகவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnr2.html
யாழில் போலி தங்கத்தை விற்பனை செய்ய முயற்சித்த நால்வர் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 06:47.08 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் போலி தங்கத்தை விற்பனை செய்ய முயற்சித்த 4 பேரை தாம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்க பொத்தான்கள் எனக் கூறி, சுமார் 3 கிலோ உலோகத்தை இவர்கள் விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நாவற்குளி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து கெப் வண்டி, பித்தாளை செம்பு, 3 கிலோ கிராம் ஈயம் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் அனுராதபுரத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnr3.html
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பதற்றம்! எஸ்.பி.யுடன் மாணவர்கள் வாக்குவாதம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 06:51.43 AM GMT ]
அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவுடன் மாணவர்கள் கடும் வாக்குவாதம் மேற்கொண்டதையடுத்து சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கடும் பதற்ற நிலை தோன்றியுள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கட்டிடமொன்றை திறந்து வைப்பதற்காக அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க இன்று அங்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அடக்குமுறை, சப்ரகமுவ பல்கலைக்கழக தமிழ் மாணவன் கைது போன்ற விடயங்கள் குறித்து மாணவர்கள் குழுவொன்று அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது.
இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்படும் நிலை தோன்றியதையடுத்து, கலகமடக்கும் பொலிஸார் உடனடியாக அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிசார் தண்ணீரை பீய்ச்சியடித்து அவர்களை விரட்ட முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் களேபரங்களுக்கு இடையில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அங்கிருந்து பாதுகாப்பாக தப்பிச் சென்றிருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்
http://www.tamilwin.com/show-RUmszATZKWnr4.html

Geen opmerkingen:

Een reactie posten