[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 06:52.35 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பு முன்வைத்துள்ள பௌத்த அரசுக்கான யோசனை தொடர்பில் அந்த அமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுபல சேனா அமைப்பின் பகிரங்க அழைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து பதிலளிக்க எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரியான டிலாந்த வித்தானகே, காலம் கடந்தேனும் ஐக்கிய தேசியக் கட்சி யதார்த்தத்தை புரிந்து கொண்டமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இருப்பதாகவும் தமது அமைப்பின் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக அந்த பேச்சுவார்த்தை இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnr5.html
செயலிழக்குமா நிபுணர் குழு?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 07:45.23 AM GMT ]
முழங்காவில் மற்றும் பூநகரி பிரதேசங்களில் இடம்பெற்ற இந்த விசாரணைகளில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவைச் சேர்ந்த எவருமே பங்கேற்கவில்லை.
காணாமல் போனோவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் நோக்கில், கடந்த ஜூலை மாதம் முதல்முறையாக மூன்று சர்வதேச நிபுணர்களின் பெயர்களை அறிவித்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
பிரித்தானியாவை சேர்ந்தவரும், இலங்கை வம்சாவளியினருமான சேர் ஜெப்ரி நைஸ் என்ற பிரித்தானிய நிபுணரும், பேராசிரியருமான டேவிட் கிறேன் என்ற அமெரிக்க நிபுணரும் இடம்பெற்றிருந்தனர்.
பின்னர், இந்த நிபுணர் குழுவில், இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டாஸ் கௌஷல், பாகிஸ்தான் சட்டநிபுணர் அஹ்மர் பி சூபி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
ஜப்பானிய நிபுணர் ஒருவரும் இந்த குழுவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கூறப்பட்ட போதிலும் இன்னமும் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.
கடந்த ஜூலை15 ஆம் திகதி முதன்முறையாக இந்த நிபுணர் குழு அறிவிக்கப்பட்ட பின்னர் மன்னாரிலும்,கிளிநொச்சியிலும் இரண்டு தொடர் அமர்வுகளை ஜனாதிபதி ஆணைக்குழு நடத்தியிருக்கிறது.
இந்த இரண்டு அமர்வுகளிலும் வெளிநாட்டு நிபுணர்கள் பங்கேற்பர் என்று முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், இரண்டு அமர்வுகளிலுமே, எந்தவொரு வெளிநாட்டு நிபுணரும் பங்கேற்கவில்லை.
குறிப்பாக கிளிநொச்சி அமர்வில் வெளிநாட்டு நிபுணர்கள் பங்கேற்பர் என்று அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனாலும்,அவர்கள் ஒருவர்கூட பங்கேற்காதது சந்தேகங்களை எழுப்பக் காரணமாகியுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில், சர்வதேச நிபுணர் குழு தலையிடாது என்றும், ஆலோசனைகளை மட்டுமே வழங்கும் என்றும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.எனினும், சாட்சிய பதிவுகளை நேரில் அவதானிக்க வெளிநாட்டு நிபுணர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை காணப்பட்டது.
ஆனால், அரசாங்கம் அவர்களை அனுமதிக்கவில்லை என்றே தெரிகிறது.
சர்வதேச சட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கவே இந்த நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதே தவிர, சாட்சியங்களை அவதானிப்பதற்கு அல்ல என்று அரச தரப்பில் காரணம் கூறப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
விசாரணையின் எந்தவொரு கட்டத்திலும், சர்வதேச நிபுணர்கள் அவதானிப்பாளர்களாகவோ, அல்லது விசாரணையாளர்களாகவோ பங்கேற்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அவ்வாறு பொதுமக்களின் சாட்சியங்களையும் அவை பதிவு செய்யப்படும் முறையையும், வெளிநாட்டு நிபுணர்கள் பார்வையிட்டால் அதற்கு அவர்கள் எதிரிப்புக்களை தெரிவிக்கலாம் என்று அரசாங்கம் கருதியிருக்கிறது போலும்.
விசாரணையின் எந்தவொரு கட்டத்திலும், சர்வதேச நிபுணர்கள் அவதானிப்பாளர்களாகவோ, அல்லது விசாரணையாளர்களாகவோ பங்கேற்பதை அரசாங்கம் விரும்பவில்லை. அவ்வாறு பொதுமக்களின் சாட்சியங்களையும் அவை பதிவு செய்யப்படும் முறையையும், வெளிநாட்டு நிபுணர்கள் பார்வையிட்டால் அதற்கு அவர்கள் எதிரிப்புக்களை தெரிவிக்கலாம் என்று அரசாங்கம் கருதியிருக்கிறது போலும்.
ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்த சர்வதேச நிபுணர் குழுவை அரசாங்கம் நியமித்தபோது, முக்கியமான ஒரு விடயம் அதில் சேர்க்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
தேவைப்பட்டால் மட்டும் ஜனாதிபதி ஆலோசனைக்குழு இந்த நிபுணர் குழுவின் ஆலோசனைகளைக் கேட்டுப்பெற முடியும் என்பதே அதுவாகும். அதாவது ஜனாதிபதி ஆணைக்குழு விரும்பினால்தான் ,வெளிநாட்டு நிபுணர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெறமுடியும்.
ஆணைக்குழுவின் விருப்பமின்றி, வெளிநாட்டு நிபுணர்களால் எதையும் செய்யமுடியாது.ஆனால் சர்வதேச சட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்குவதற்கு நிபுணர் குழுவை நியமிக்குமாறு தாமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுக்கொண்டதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச நிபுணர்களின் உதவி தேவையில்லை என்று ஜனாதிபதி ஆணைக்குழுவினால் ஒருபோதும் கூறமுடியாது.
அதேவேளை காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் சாட்சியங்களை பெறும் அமர்வுகளில் கூட ஆணைக்குழுவின் தலைவர் அழைப்பு விடுத்தால் மட்டுமே சர்வதேச நிபுணர் குழுவினால் பங்கேற்கமுடியும்.
கடந்த மாதம் 19 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவுக்கும்,சேர் டெஸ்மன்ட் டி சில்வா தலைமையிலான சர்வதேச நிபுணர் குழுவிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுயிருந்தது.
அதற்கு பின்னரே கிளிநொச்சி அமர்வில் சர்வதேச நிபுணர்கள் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டதாக தெரியவருகிறது.
இந்த கூட்டத்துக்கு பின்னர், இந்திய மனித உரிமை ஆர்வலர் அவ்டால் கௌஷல், உடகங்களுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் நிபுணர் குழுவில் தனது பங்களிப்பு தொடர்பாக விசனத்துடன் கருத்து வெளியிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
தனது பணியை விரிவாக்கும் படி அரசாங்கத்திடம் தாம் கோரவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதன் அர்த்தம் என்னவென்றால் மட்டுப்படுத்தப்பட்ட பணியே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதேயாகும்.
நிபுணர் குழு நியமிக்கப்பட்டவுடன், அவ்டால் கௌசல் பல்வேறு கருத்துக்களை ஊடகங்களுக்கு கூறி வந்தார். அவற்றில் பல அரசாங்கத்துக்கு சார்பானவை, இன்னும் சில விரோதமானவை.
ஐ.நா விசாரணையாளர்கள் இலங்கை வர அனுமதி மறுக்கப்பட்டதையும் விமர்சித்துள்ள கௌசல் விசாரணைகளில் வெளிப்படை தன்மை தேவை என்றும் வலியுறுத்தியிருக்கின்றார். அதுமட்டுமன்றி, அவர் தனது பணிகள் விரிவாக்கப்படாவிட்டால் மீண்டும் இலங்கைக்கு வரப்போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அதனை ஒரு எச்சரிக்கையாகவும் கருதவேண்டும். இலங்கை அரசாங்கம், சர்வதேச விசாரணைக்குழு ஒரு வட்டத்துக்குள் மட்டும் நிற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது.
ஆனால் அந்த வட்டத்துக்குள் சிக்கிக்கொண்டு தமது பெயர்களை கெடுப்பதற்கு பெரும்பாலான நிபுணர்கள் விரும்பமாட்டார்கள். குறிப்பாக பாகிஸ்தான் நிபுணர் தனக்கு இப்போது கொழும்பு வருவதற்கு நேரமில்லை என்று கூறிவிட்டார்.
ஏற்கனவே இன்னொரு நிபுணரான ஜெப்ரி நைஸ் தனக்கு கொழும்பு வருமாறு அழைப்பு விடுக்கப்படவோ தமது பணிக்குறித்து விபரிக்கப்படவோ இல்லை என்று கடந்த மாதம் குறிப்பிட்டிருந்தார்.
தனியே சேர் டெஸ்மன்ட் டி சில்வா மட்டும் கடந்த இரண்டு மாதங்களாக கொழும்பு வந்து செல்கிறார்.
அவரது நிகழ்ச்சி நிரல் கூட சந்தேகங்களை எழுப்புவதாகவே உள்ளது. குறிப்பாக கடந்த ஓகஸ்ட் மாதம் அவர் கொழும்பு வந்திருந்த போது போரின் இறுதி கட்டத்தில் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் களமுனையில் போரை வழிநடத்திய டிவிசன் மற்றம் பிரிகேட் தளபதிகளைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
போர் முனையில் நடந்தது என்ன என்ற விபரத்தை அப்போது அவர் திரட்டியிருந்தார்.அதில் வெறெந்த வெளிநாட்டு நிபுணரும் பங்கேற்கவில்லை.தனிப்பட்டமுறையில் அரச தரப்பில் உள்ளவர்களின் சாட்சியங்களைப் பெற்றுக்கொண்ட சேர் டெஸ்மன்ட் டி சில்வா எதற்காக பொதுமக்களின் சாட்சியங்களை அவதானிக்க முனையவில்லை என்ற கேள்வி எழுகிறது.
இதன் காரணமாக சர்வதேச நிபுணர் குழு படையினரை பாதுகாப்பதற்காகவும் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவும் தான் உருவாக்கப்பட்ட ஒன்றா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச நிபுணர் குழுவை அரசாங்கம் நியமித்தது தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கே என்பதில் சந்தேகமில்லை.
சர்வதேச அரங்கில் அரசாங்கத்துக்கு இருந்து வந்த அழுத்தங்களைக் குறைப்பதற்காகவே ,சர்வதேச நிபுணர் குழுவை அமைக்கும் முடிவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுக்கவேண்டியிருந்தது.
அதனால் தான் இந்த குழுவை முழுமையாக செயற்படவிடாமல் முடக்கிப் போட பார்க்கின்றது அரசாங்கம்.
அதாவது பெயரளவுக்கு ஒரு சர்வதேச நிபுணர் குழு இருந்தால் போதும் என்பதே அரசாங்கத்தின் திட்டமாகும்,அதனால் தான் இவர்களை கொஞ்சம் எட்டத்தில் நிற்க வைத்திருக்கிறது.
ஆனால் அது ஒரு விபரீத விளையாட்டு என்பதை அரசாங்கம் விரைவிலேயே உணர்ந்து கொள்ளவேண்டிவரலாம். ஏனென்றால் இதில் இடம்பெற்றுள்ளவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற துறைசார் நிபுணர்கள் தமது பெயர்களை பயன்படுத்தி இலங்கை அரசாங்கம் நன்மை தேடிக் கொள்வதை அவர்கள் அனுமதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
சேர் டெஸ்மன்ட் டி சில்வா போன்று ஒரு சிலர் வேண்டுமானாலும் அரசாங்கத்துக்கு ஒத்துழைக்கலாம் ,ஆனால் எல்லோரும் அவ்வாறு செய்வார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது.
அவர்கள் எதிர்த்து வாயை திறக்கும் நிலை ஒன்று உருவாகினால் அது அரசாங்கத்துக்கு பெரும் சிக்கலை யே ஏற்படுத்தும். இந்திய நிபுணர் அவ்டால் கௌசல் அதிருப்தியான கருத்துக்களையே கொண்டிருக்கின்றார் என்பதை விளங்கமுடிகிறது.
இது முன்னைய கருத்துக்கம் இலங்கை வந்து சென்ற பின்னர் வெளியிட்ட கருத்துக்கும் இடையிலான தொனியில் வித்தியாசம் தெரிகிறது.
அதாவது இந்த பங்களிப்புத் தொடர்பாக சர்வதேச நிபுணர்கள் கூடுதல் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர் என்பதை கௌசலின் கருத்தில் இருந்து புலப்படுகிறது.ஆனால் இலங்கை அரசு அவர்களுக்கு இங்கு கால்கட்டுப் போட்டுவிட முனைகிறது.
சர்வதேச நிபுணர்கள் அத்தகைய கட்டுப்பாட்டுக்கள் நின்று செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது.
முன்னர் 19 படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட உடலகம ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்திய நீதிபதி பகவதி தலைமையில் 10 வெளிநாட்டு நிபுணர்களை கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் ஆணைக்குழுவின் மீதிருந்த நம்பிக்கையீனத்தால் அந்த நிபுணர்கள் குழு ஒதுங்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.
அதே நிலை இந்த சர்வதேச நிபுணர் குழுவுக்கு ஏற்பட்டால் ஆச்சரியப்பட முடியாது.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnr7.html
Geen opmerkingen:
Een reactie posten