[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 03:36.13 PM GMT ]
ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் லண்டனுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின் போது அவர் விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களை சந்தித்ததாக அரச சார்பு ஊடகங்கள் பரபரப்புச் செய்திகளை வெளியிட்டன. அதற்கு ஆதாரமாக ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தன.
எனினும் அந்தப் புகைப்படத்தில் இருந்த நால்வரும் சிங்களவர்கள் என்பதும், ஐக்கிய தேசியக் கட்சி லண்டன் கிளையின் முக்கியஸ்தர்கள் என்பதும் பின்னர் தெரிய வந்தது.
இந்நிலையில் குறித்த புகைப்படத்தில் இருந்த நான்கு நபர்களில் ஒருவரான ஹர்ஷ கன்னங்கர என்பவர் இலங்கையின் முக்கிய ஊடகங்களை நேற்றிரவு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதன் போது தான் ஒருபோதும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளனாகவோ, செயற்பாட்டாளனாகவோ இருக்கவில்லை என்றும், உண்மையான சிங்களவன் என்றும் அவர் கதறியுள்ளார்.
மேலும் தனது குடும்பத்தினருடன் தோன்றும் புகைப்படம் ஒன்றையும் ஊடகங்களுக்கு அவர் வழங்கியுள்ளார்.
குறித்த புகைப்படம் தொடர்பான செய்தி காரணமாக தனக்கும் இலங்கையில் இருக்கும் தனது குடும்பத்தினருக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அப்பாவிகளை புலிகளை சித்தரித்த அரச ஊடகங்கள் இது தொடர்பில் தமது தவறை ஏற்றுக் கொண்டு, மறுப்புச் செய்தி வெளியிட இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லோரும் அமைச்சர் பதவி கேட்டால் நாங்கள் எங்கே போவது? ஐ.தே.க. திணறல்
ஆளுங்கட்சியில் இருந்து ஐ. தே. க.வுக்குத் தாவக் காத்திருக்கும் அனைவரும் தமக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதால் ஐ.தே.க. தலைமை திணறத் தொடங்கியுள்ளது.
ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளால் கடும் அதிருப்தி அடைந்துள்ள முக்கிய அமைச்சர்களுடன் பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் விரைவில் கட்சிதாவ காத்திருக்கின்றனர். ராஜித சேனாரத்தின, சுமேதா ஜயசேன, நவீன் திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க, உள்ளிட்ட பலரும் இந்தப் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர்.
இந்நிலையில் முக்கிய அமைச்சர்கள் தவிர ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றவர்கள் கூட எதிர்காலத்தில் அமையும் ஐ.தே.க. அரசில் தமக்கு அமைச்சுப் பதவி வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக ஐ.தே.க. தலைமை தற்போது சற்றுத் திணறிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆளுங்கட்சியில் இருந்து சுமார் 30 பேர் அளவில் ஐ.தே.க. வில் இணையக் காத்திருக்கின்றனர்.
அவர்கள் அனைவருக்கும் அமைச்சுப் பதவி வழங்கினால், ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்களுக்கு எதுவும் இல்லாது போய்விடும் என்றும் கூறப்படுகின்றது.
ஏனெனில் ஐ.தே.க. அரசில் அமைச்சர்களின் எண்ணிக்கை 25க்கு மேல் இருக்கக் கூடாது என்று இப்போதே கண்டிப்பாக வரையறை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும் அமைச்சுப் பதவி கோரிக்கை ஒரு புறமிருக்க ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் விரைவில் ஐ.தே.க. வில் இணைவது உறுதி என்பதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
அரசாங்கம் கலைஞர்களுக்காக எதுவும் செய்யவில்லை- ரோசி சேனாநாயக்க
அரசாங்கம் கலைஞர்களுக்காக எதுவும் செய்யவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று கலைஞர்களுக்கும் கலைகளுக்கும் இடமில்லை. கலைஞர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
நான் வருந்துகின்றேன். நாட்டில் இருந்த மிகச் சிறந்;த கலைஞர் ஒருவர் வாழ்ந்து வரும் நிலையை நினைத்து கவலைப்படுகின்றேன்.
கலைஞர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் அங்கீகாரம் தொடர்பில் திருப்தியடைய முடியாது.
கலைஞர்களை பயன்படுத்தி வெற்றியீட்டிய இந்த அரசாங்கம் கலைஞர்களுக்கு எதனையும் செய்வதில்லை.
கலைஞர்களுக்கு என்ன செய்கின்றார்கள் என்பது குறித்து கண்காணிக்க வேண்டும் என ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
மொரட்டுவை நகரசபைத் தலைவர் அனுரசிறி டி சில்வாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைஞர்களுக்கான பாராட்டு நிகழ்வில் பங்குபற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றியில் அதீத நம்பிக்கை! வரவு-செலவுத்திட்ட அறிக்கையும் தயார்?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் அமையும் என்ற அதீத நம்பிக்கை கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் 2015ம் ஆண்டுக்கான மாற்று வரவு-செலவுத்திட்ட அறிக்கையையும் அக்கட்சி தயாரித்து வருகின்றது. அதிகாரத்துக்கு வந்தபின் இந்த வரவு-செலவுத்திட்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐ.தே.க. உத்தேசித்துள்ளது.
ஐ.தே.க.வின் உத்தேச வரவு-செலவுத்திட்ட அறிக்கை தொடர்பான விபரங்களை சில நாட்களுக்குள்ளாக ஊடகங்களுக்கு வழங்குவதற்கும் கட்சி முக்கியஸ்தர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எனினும் நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவு-செலவுத்திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை என்றும் ஐ.தே.க. முடிவெடுத்துள்ளது.
அரசாங்கத்தின் இறுதி வரவு-செலவுத்திட்ட அறிக்கை இதுவாகத்தான் இருக்கும் என்பதால், இடையூறுகள் இன்றி அதனை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாகவும் ஐ.தே.க. அறிவித்துள்ளது
http://www.tamilwin.com/show-RUmszARXKXnq0.html
ஆட்டம் முடியப் போகின்றது, அடங்கி இருங்கள்! சரத் பொன்சேகா ஜனாதிபதிக்கு எச்சரிக்கை
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 04:47.38 PM GMT ]
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் குறிப்பிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க மக்கள் தயாராக இல்லை.
எதிர்வரும் தேர்தலில் அதற்கான சரியான தண்டனையை வாக்காளர்கள் வழங்கக் காத்திருக்கின்றார்கள். அந்த வகையில் அரசாங்கத்தின் ஆட்டம் முடியும் தறுவாயை நெருங்கி விட்டுள்ளது.
ஜனாதிபதி கதிரை கைமாறப் போகின்றது. எனவே இனியாவது அரசாங்கம் அடக்கி வாசிப்பது நல்லது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இது பொருந்தும் என்றவாறு சரத் பொன்சேகா குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கடும் சீற்றத்துடன் எச்சரித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKXnq5.html
பெண்ணொருவரின் தகாத நட்பு! பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பதவிக்கு ஆபத்து?
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 04:35.15 PM GMT ]
குறித்த பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சிறிது காலத்திற்கு முன்னர் களுத்துறை பிரதேசத்தில் கடமையாற்றியிருந்தார். அக்காலப் பகுதியில் அவருக்கு ஒரு பெண்ணுடன் தகாத நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அளுத்கம கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட சக சிறுபான்மை மக்கள் மீது கரிசனையுடன் செயல்பட்டதன் காரணமாக குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் தலைமையகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் இங்கு கடமையைப் பொறுப்பேற்ற பின்னரும் அவரது நண்பி அடிக்கடி அலுவலகத்துக்கு வந்து அவரைச் சந்தித்துச் செல்வதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அவர்கள் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், கோபம் கொண்ட நண்பி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அடையாள அட்டையைப் பறித்துச் சென்றுள்ளார்.
சில நாட்களின் பின்னர் அவர் மனம் மாறி அடையாள அட்டையைத் திருப்பி அனுப்பி விட்டதாக தெரியவந்துள்ளது. எனினும் குறித்த சம்பவம் பொலிஸ் திணைக்களத்துக்கு இழுக்கை ஏற்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக உள்ளக ஒழுக்காற்று விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கான உத்தரவை பொலிஸ் மா அதிபர் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszARXKXnq4.html
Geen opmerkingen:
Een reactie posten