[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 04:26.48 PM GMT ]
இன்று மாலை இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. பாலித பெர்ணாண்டோவுக்கு பதிலாகவே யுவன்ரஞ்சன சட்டமா அதிபராக பதவியேற்றுள்ளார்.
யுவன்ரஞ்சன சட்டமா அதிபராக பதவியேற்கும் முன்னர் பிரதி சொலிஸிட்டர் ஜெனரலாக செயற்பட்டு வந்தார்.
இவர் 34 வருட அனுபவத்தை சட்டத்துறையில் கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKXnq3.html
அரசாங்கம் தனது வீழ்ச்சியை ஏற்றுக்கொண்டுள்ளது! அசாத் சாலி
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 05:31.11 PM GMT ]
பொதுவாக நவம்பரில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய வரவு- செலவுத் திட்டத்தை அக்டோபரில் சமர்ப்பிக்கும் நோக்கமே அரசாங்கத்தின் தோல்விப் பயம் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நவம்பரில் ஆளுங்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துவிடுவார்கள் . அதன் காரணமாக வரவு செலவுத்திட்டத்தை வெற்றிபெற வைப்பதற்கான பெரும்பான்மை அரசாங்கத்துக்கு இல்லாது போய்விடும்.
அந்தப் பயத்தின் காரணமாகவே முற்கூட்டியே அக்டோபரில் வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளது என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKXnq6.html
புனித பாப்பரசரின் வருகையை முன்னிட்டு முத்திரை வெளியீடு! அரசாங்கம் தீர்மானம்
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 05:35.35 PM GMT ]
புனித பாப்பரசர் பிரான்சிஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு அவரைக் கௌரவிக்கும் வகையில் முத்திரைப் பணியகத்தின் வடிவமைப்பில் ஞாபகார்த்த முத்திரையொன்று வெளியிடப்படவுள்ளது.
பத்து ரூபா முகப்புப்பெறுமதியைக் கொண்ட இந்த முத்திரையில் பாப்பரசரின் படம் மற்றும் அவருடைய இலங்கை விஜயம் இடம்பெறும் திகதி என்பன உள்ளடக்கப்பட்டிருக்கும்.
“பாப்பரசரின் இலங்கை வருகை” என்று இந்த முத்திரைக்கு பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஏமாற்றுப் பேர்வழிகள் சிலர் பாப்பரசரின் வருகையை முன்னிட்டு வெளியிடப்படவுள்ள முத்திரையின் விபரம் அடங்கிய முதல்நாள் உறையுடன் முத்திரையைப் பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணவசூல் செய்து கொண்டிருப்பதாக முத்திரைப் பணியகத்துக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
அவ்வாறான முகவர்கள் யாரையும் தாம் நியமிக்கவில்லை என்று வலியுறுத்தியுள்ள முத்திரைப் பணியகம், பாப்பரசரின் வருகை குறித்து வெளியிடப்படும் முத்திரையை அரசாங்க முத்திரைப் பணியகத்தில் மாத்திரமே முதல்நாள் உறையுடன் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARXKXnq7.html
Geen opmerkingen:
Een reactie posten