இலங்கையில் நடப்பது காட்டாட்சி: லக்ஷ்மன் கிரியெல்ல விமர்சனம்- நாடு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது: ஜே.வி.பி
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 06:31.43 AM GMT ]
இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் எந்தவொரு நிறுவனமும் சுதந்திரமாக செயற்பட முடியாது, அனைத்தும் நிறைவேற்று அதிகார சால்வைக்குள் முடிச்சிடப்பட்டுள்ளன, அரச ஊழியர்கள் முடக்கப்பட்டுள்ளனர்.
ஊழலும், மோசடியும் இந்நாட்டில் தலைவிரித்தாடுகின்றன,யாரும் இவற்றைத் தட்டிக்கேட்க முடியாது.
ஊடகங்களில் கூட அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது.
தேர்தல் திணைக்களம், சட்டத்துறை, பொலிசார், இராணுவத்தினர் என அனைத்துத் தரப்பினரும் நிறைவேற்று அதிகாரத்தின் ஆணைகளை மட்டுமே நிறைவேற்றும் எடுப்பார் கைப்பிள்ளையாகிப் போய்விட்டார்கள்.
இவற்றைத் தடுக்கும் அதிகாரம் கொண்ட நீதித்துறையோ தூங்கிக் கொண்டிருக்கின்றது.
அரசாங்கத்தின் முறைகேடான சட்டமூலத்தை நிராகரித்த ஒரே காரணத்துக்காக தலைமை நீதிபதியே வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டார். அதன் காரணமாக அங்கு கொஞ்சமாவது ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றது.
ஆனால் இலங்கையில் ஜனநாயகம் என்பது மருந்துக்குக் கூட இல்லை. காட்டாட்சி தத்துவம் தான் நடைமுறையில் உள்ளது என்று விமர்சித்துள்ளார்.
தரம் குறைந்தவர்கள் அதிகாரத்தில் இருப்பதனால் நாடு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது: ஜே.வி.பி.
தரம் குறைந்தவர்கள் அதிகாரத்தில் இருப்பதனால் நாடு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்டாரின் தலைநகர் டோஹாவில் நடைபெற்ற எமது நோக்கு என்ற கருத்தரங்கில் பங்கேற்ற போது அவர் இதனை நேற்று குறிப்பிட்டுள்ளார்.
தரம் குறைந்தவர்கள் அதிகாரத்தில் இருப்பதனால் நாட்டின் வெளிவிவகார சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, பிரிட்டனுக்கான உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸை தாக்கியமை தனிப்பட்ட இரு நபர்களுக்கு இடையிலான சண்டை கிடையாது.
அந்த இருவருமே இந்த நாட்டை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகளை சஜின் வாஸே நிர்வாகம் செய்கின்றார். அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.
தொழில் சார் தகுதிகளை உடையவர்கள் ராஜதந்திர சேவையில் உதாசீனம் செய்யப்பட்டு, அரசியல் நியமனங்களின் ஊடாக பதவி வகிப்பவர்களின் கரம் ஓங்கியுள்ளது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVev3.html
பாலியல் தொழிலாளிகளும் மனிதர்களே! அவர்களுக்கு மனித உரிமையுள்ளது!- உதுல் பிரேமரத்ன
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 06:32.39 AM GMT ]
இதனால், இவர்கள் அனைவருக்கும் இருக்கும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இரத்தினபுரியில் பொலிஸ் அதிகாரியின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் மனித உரிமைகளை கோரி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்த போதே உதுல் பிரேமரத்ன இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரியின் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கு தேசிய அடையாள அட்டை கூட இல்லை. அவர் பாலியல் தொழிலாளியா, பாதாள உலக குழு உறுப்பினரா என்பதற்கு பதிலாக அவர்களும் மனிதர்கள் என்பதை சமூகத்திற்கு எடுத்துக்காட்டவே தாம் முயற்சித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றம் எப்படியான தீர்ப்பை வழங்கினாலும் தெரு வாசிகளுக்கு சமூகத்தில் இடமில்லை. பாலியல் தொழிலாளிகளுக்கு சமூகத்தில் மதிப்பில்லை, அவர்களின் தலையில் கல்வீசி தாக்கினால் பரவாயில்லை என்ற சமூக மனநிலையை மாற்ற வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும் உதுல் பிரேமரத்ன மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVev4.html
Geen opmerkingen:
Een reactie posten