[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 06:42.27 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடு குறித்து வினவியபோதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள ஆட்சியாளர்கள் அதிகாரத்தை இலகுவில் விட்டுத்தர தயாராக இல்லை என்றும் இரத்தவெறி பிடித்த காட்டேறிகள் போன்று இவர்கள் அதிகார வெறி பிடித்தவர்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்நாட்டின் தேர்தல் ஆணையாளருக்கும் முதுகெலும்பில்லை. அவரால் நீதியானதும்,நியாயமானதுமான தேர்தல்களை நடத்த முடியாது.
அரச தரப்பின் அடியாளாகவே அவர் செயற்படுகின்றார். இதற்கு எதிராக நீதிமன்றம் செல்லவும் முடியாது. அங்கும் ஜனாதிபதி மாளிகையின் சமையலறை உதவியாளர்கள் உள்ளனர். எனவே நீதி கிடைக்காது.
இந்நிலையில் வரும் தேர்தல்களில் இந்த மோசடி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் பொறுப்பு பொதுமக்களுக்கு உண்டு.
நீதியையும்,நியாயத்தையும் பாதுகாக்கக் கூடியவர்களுக்கு துணிச்சலாக வாக்களித்து அந்த மாற்றத்தை ஏற்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVev5.html
மகிந்தவுக்கு முன்றாவது முறையாக முடியாது! சட்டவிரோத ஜனாதிபதித் தேர்தல் வேண்டாம்!- ஜே.வி.பி
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 06:43.34 AM GMT ]
18வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் பிரகாரம் இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.
எனினும் குறித்த அரசியல் அமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், மகிந்த ராஜபக்ஷ, இரண்டாம் முறைக்கான ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டால், அவரால், மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது என்பது ஜே.வி.பியின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
இதனால், மூன்றாவது முறையாக மகிந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், அது சட்டவிரோதமான ஜனாதிபதித் தேர்தல் என்பதால், அந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கவும் பொது வேட்பாளரை ஆதரிப்பதில்லை எனவும் அந்த கட்சி தீர்மானித்துள்ளது.
மகிந்தவுக்கு மூன்றாவது முறையாக முடியாது - சட்டவிரோதமான ஜனாதிபதித் தேர்தல் வேண்டாம் என வாசகங்கள் எழுதப்பட்ட சுவரொட்டி பிரசாரம் ஒன்றையும் ஜே.வி.பி இன்று காலை ஆரம்பித்தது.
அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு தெளிவான பெரும்பான்மை பலம் இல்லை என்பதால், 18வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATYKVev6.html
Geen opmerkingen:
Een reactie posten