தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 oktober 2014

பயிர்ச்செய்கைக்காக நிலத்தினை சுத்தம் செய்யும்போது இராணுவம் தடுத்து நிறுத்தியது: த.கலையரசன்!

ஜனாதிபதித் தேர்தல் முன்கூட்டி நடத்துவதை எதிர்க்கும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 06:19.46 AM GMT ]
ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில், எந்த காரணத்தினால், ஜனாதிபதித் தேர்தலை நடத்த தயாராகி வருகிறீர்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அரசாங்கத்திற்குள் மோதல்கள் வலுவடைந்து வருவதுடன் ராஜபக்ஷவினரை எதிர்க்கும் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் அவசரமாக நடாத்தப்படும் ஜனாதிபதித் தேர்தலுக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் கடிதம் மூலம் இது மேலும் உறுதியாகியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தனிப்பட்ட ரீதியில் இவ்வாறான எழுத்து மூல கேள்வியை எழுப்பியிருக்கமுடியாது எனவும் ராஜபக்ஷவினரை எதிர்க்கும் சகலரது இணக்கத்துடன் அவர் இந்த கடிதத்தை அனுப்பியிருக்கலாம் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வழங்கிய உறுதிமொழிகளில் பெரும்பாலான உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு பதிலாக அந்த உறுதிமொழிகளை நிறைவேற்றி விட்டு தேர்தலை நடத்துவது சாதகமாக அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராஜபக்ஷ குடும்ப ஆட்சியின் காரணமாக கடும் பாதிப்புகளை எதிர்நோக்கிய சிரேஸ்ட உறுப்பினர்களில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் ஒருவர்.
இந்த நிலையில், எதிர்காலத்தில் அரசாங்கத்தில் இருக்கும் பலர் ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக பகிரங்கமான முனைப்புகளை மேற்கொள்ள தயாராகி வருவது அமைச்சர் மைத்திரிபாலவின் கடிதம் ஒரு அடையாளம் எனவும் அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVevz.html
ஞானசார தேரரின் சகா நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது!
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 06:19.49 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பின் நிதிச் செயலாளரான வெல்லம்பிட்டியே சுமணதம்ம தேரர் நேற்று இரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
75 லட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நெருங்கிய சகாவான சுமணதம்ம தேரர் மீது அந்த அமைப்பில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுமணதம்ம தேரர் பேலியகொடவில் உள்ள வீடொன்றில் ஒழிந்திருந்திருப்பதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVev0.html
பயிர்ச்செய்கைக்காக நிலத்தினை சுத்தம் செய்யும்போது இராணுவம் தடுத்து நிறுத்தியது: த.கலையரசன்
[ சனிக்கிழமை, 04 ஒக்ரோபர் 2014, 06:25.14 AM GMT ]
பொத்துவில் பிரதேசத்தில் உள்ள கூனப்பங்கேணிக்கு அருகாமையில் உள்ள ஊற்றுச்சேனை எனும் இடத்தில் மேட்டு நிலப்பயிர்ச்செய்கையினை செய்வதற்காக இடத்தினை சுத்தம் செய்து கொண்டு இருக்கும் போது அந்த இடத்தில் இராணுவத்தினர் நுழைந்து அதனை தடுத்து நிறுத்தியதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில் 60 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஊற்றுச்சேனையில் தமிழர்கள் மேட்டு நிலப்பயிர்ச்செய்கையினை மேற்கொண்டும் நிலத்தினை பராமரித்தும் வந்திருக்கின்றார்கள்.
ஆனால் நேற்று அவர்கள் அந்த இடத்தினை பயிர்செய்கை செய்வதற்காக சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது இராணுவத்தினர் அங்கு வந்து அதனை தடுத்து நிறுத்தியிருக்கும் சம்பவம் அந்த மக்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்திருக்கின்றது.
இந்த நாட்டிலே சிவில் நிர்வாகம் சிறந்த முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்று கூறும் அரசாங்கம் ஏன் இராணுவத்தினரை பயன்படுயத்த வேண்டும்.
இதற்கான காரணம் எமது மக்களை அச்சநிலைக்கு உட்படுத்தி அவர்களினது முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவதுதான் அவர்களினது உள்நோக்கமாக இருக்கின்றது என்பதனை உணரமுடிகின்றது.
அந்த இடத்தில் உள்ள காணிகள் முறையற்ற விதத்தில் சுவீகரிக்கப்படுவதாக தங்கள் அறிந்தால் சிவில் நிர்வாகத்தினை பயன்படுத்த அந்தப்பிரச்சனையை கையாள முடியும் (பொலிசாரைக்கொண்டு) அதைவிடுத்து இராணுவத்தினரைக் கொண்டு அந்த மக்களை அந்த இடத்தில் இருந்து வெளியேறுமாறு வற்புறுத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.
இவ்வாறுதான் தமிழர் தாயகப்பிரதேசங்களில் இருக்கும் காணிகள் மாற்று இனத்தவர்களினால் சுவீகரிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszATYKVev1.html

Geen opmerkingen:

Een reactie posten