தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 oktober 2014

நிதிமோசடி பெரிய விடயம் கிடையாது: ஞானசார தேரர்

தொண்டமான் ஹக்கீமை ஓரம் கட்ட வேண்டும்: உதய கம்பன்பில
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 05:28.04 AM GMT ]
சிறப்புரிமைக்காக வாக்குகளை ஏலம் போடும் தொண்டமான், ஹக்கீம் போன்றவர்களை ஓரம் கட்டி பௌத்தர்களை பாதுகாக்க யார் வருகின்றார்களே அவர்களையே ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்கவேண்டும்.
நாயை வால் ஆட்டுவிக்கும் நிலையை மாற்றி நாய் வாலை ஆட்டுவிக்கும் நிலைக்கு நாம் வர வேண்டும் என ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்பன்பில தெரிவித்துள்ளனார்.
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் 10 இலட்சம் சிங்கள பௌத்த வாக்குகளை அதிகரிக்க நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும் இதுவே எமக்குள்ள சவால்.
அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் திணைக்கள தலைவர் பதவிகளை பணத்திற்காக தமக்கு கிடைக்கும் வாக்குகளை ஏலம் போடுகின்றார்கள்.
அதற்கமையவே நாட்டு தலைவர்கள் தீர்மானிக்கும் நிலையை மாற்றி நாயை வால் ஆட்டுவிப்பதை தவிர்த்து நாய் வாலை ஆட்டுவிக்கவேண்டும்.
சம்பந்தன் 6 இலட்சம் வாக்கு, ஹக்கீம் 3 இலட்சம் வாக்கு, தொண்டமான் 2 இலட்சம் வாக்குகளை தம் வசம் வைத்துள்ளனர். இதை தகர்க்க சிங்கள பௌத்தர்களான நாம் வழியமைக்கவேண்டும்.
எதிர் காலத்தில் ஜனாதிபதி வேட்பாளராக வருபவர்களுக்கு இதை கூறி சிங்கள பௌத்தர்களான நாம் ஒரு அணியில் இணைய வேண்டும்.
எதிர்காலத்தில் சிங்கள பௌத்தர்களை பாதுகாக்கும் ஒருவருக்கே நாம் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கவேண்டும் என அவர் மெலும் தெரித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnwz.html
நிதிமோசடி பெரிய விடயம் கிடையாது: ஞானசார தேரர்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 05:28.23 AM GMT ]
நிதிமோசடி போன்ற விடயங்கள் எல்லாம் ஒன்றும் பெரிய விடயங்கள் கிடையாது என்று ஞானசார தேரர் கர்ஜித்துள்ளார்.
பொதுபல சேனாவின் பிரதிச் செயலாளர் வெல்லம்பிடியே சுமண தம்ம தேரர் முறைகேடான வகையில் விகாரையொன்றுக்குச் சொந்தமான காணியை விற்பனை செய்து லட்சக்கணக்கிலான பணத்தைச் கொள்ளையிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொதுபல சேனாவின் முக்கியஸ்தர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டது குறித்து இணையத்தள ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டிருந்தன.
இது அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வெல்லம்பிடிய சுமண தேரரின் கைது தொடர்பாக ஊடகங்கள் கருத்துக் கேட்டபோது ஞானசார தேரர் எரிந்து விழுந்துள்ளார்.
தமது அமைப்பின் பிரதிச் செயலாளர் முறைகேடு செய்திருப்பது உண்மை என்று ஏற்றுக் கொண்டுள்ள அவர், பணமோசடி ஒன்றும் பெரிய குற்றம் கிடையாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வெல்லம்பிடிய சுமண தேரரின் நடவடிக்கை காரணமாக தமது அமைப்புக்கு எந்தவித கெட்டபெயரோ, நெருக்கடியோ ஏற்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnw0.html

Geen opmerkingen:

Een reactie posten