தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 oktober 2014

படகில் இருந்து குதித்து சவுக்கு காட்டுக்குள் ஓடிய 2 இலங்கையரை தேடி கியூ பிரிவு வலைவீச்சு !

இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழ்நாடு, தங்கச்சிமடம் பிரதேசத்திற்கு வந்து, தலைமறைவாகியுள்ள இரு இலங்கையர்கள் தொடர்பில் தமிழ்நாடு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த இரு இலங்கையர்களும் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் கியூ பிரிவு பொலிஸார் கூறியுள்ளனர். இலங்கையிலிருந்து கடத்தல் பொருட்களையும், ஆட்களையும் ஏற்றிச் செல்ல தங்கச்சிமடம் கடற்கரைக்கு படகு ஒன்று வருவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை(03) இரவு தங்கச்சிமடம் கடற்கரையில் கியூ பிரிவு பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தங்கச்சிமடம் - பாம்பன் இடைப்பட்ட கண்ணாபாடு கடற்கரையில் ஒரு பிளாஸ்டிக் படகில் இருவர் வந்து இறங்கினர். அங்கு பதுங்கியிருந்த பொலிஸார் அவர்களை பிடிக்க முயன்ற போதும் சந்தேகநபர்கள் இருவரும் படகில் இருந்து வேகமாக குதித்து சவுக்கு காட்டுக்குள் நுழைந்து தப்பி ஓடி விட்டனர். இரவு நேரமானதால் பொலிஸாரால் அவர்களை பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து, அவர்கள் வந்த பிளாஸ்டிக் படகை பொலிஸார் சோதனை செய்த போது அது இலங்கையை சேர்ந்தது என்று தெரியவந்துள்ளது.
படகின் முன் பகுதியில் டி.எம்.என்.பி.46,2326 என்.பி.ஒ. என்ற பதிவு எண் எழுதப்பட்டுள்ளதுடன் ஊதா, பச்சை, வெள்ளை நிறத்தினால் ஆன அந்த படகு சுமார் 20 அடிநீளமும், 6 அடி அகலமும் கொண்டதாக உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், அந்த படகில் 2 கலன்களில் சுமார் 25 லீட்டர் மண்ணெண்ணெய், 1 லீற்றர் பெற்றோல், 1 லீற்றர் எண்ணெய், அதிக சக்தி கொண்ட ஒரு என்ஜின், ஆகியவை காணப்பட்டுள்ளன. சனிக்கிழமை(04) காலை கியூ பிரிவு பொலிஸார் அந்த பிளாஸ்டிக் படகை டிராக்டர் மூலம் கொண்டு வந்து மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் தப்பியோடிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
http://www.athirvu.com/newsdetail/1161.html

Geen opmerkingen:

Een reactie posten