ஜெயலலிதாவைப் பார்க்க பெங்களூருக்கு வரும் தமிழகத்தினர் அங்கே போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
அவரை சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து சிறைப் பகுதியில் அதிமுகவினர் பெருமளவில் திரண்டு வருகின்றனர்.
ஜெயலலிதாவை வாழ்த்தியும், கர்நாடக அரசின் சதியால் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறியும், போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.
இதனால், உள்துறை அமைச்சர் ஜார்ஜ், சட்டஅமைச்சர் ஜெயச்சந்திரா ஆகியோருடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதில் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றுவதே நல்லது என்று முன்னாள் பிரதமர் தேவே கெளடாவும் கூட ஏற்கனவே வலியுறுத்தியிருக்கிறார்.
எனவே ஜெயலலிதாவின் ஜாமீன் மனு 7ம் திகதி விசாரணைக்கு வருகிறது. அன்று ஜாமீன் கிடைக்காவிட்டால் அவரை உடனடியாக சிறை மாற்றம் செய்ய கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
http://www.newindianews.com/view.php?20460Ym2223KODfdceaSmOJd4ce0M6AKeadcAcMQedbdbxlAS204317mY3e04cA4oQ23
|
Geen opmerkingen:
Een reactie posten