சிக்கலில் மாட்டியுள்ள மகிந்த அரசு: காமெடிப் பீசாக மாறிவரும் ஸ்ரீலங்கா பிரதமர் !
[ Oct 25, 2014 06:04:08 AM | வாசித்தோர் : 5720 ]
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, திஸ்ஸ கரலியத்த, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜனாதிபதி குடும்ப அரசியலில் ஈடுபட்டு வருவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை பொய்ப்பிக்கும் நோக்கில் பிரதமர் பதவியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு வழங்காது, அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தாம் தேக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருவதாகவும் பதவியை வகிக்கத் தயார் எனவும் தற்போதைய பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். இப்படி ஒரு நபர் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத நிலை இலங்கையில் உள்ளது. பிரதமர் என்ற போலி பொம்மை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ?
http://www.athirvu.com/newsdetail/1291.htmlசிங்களம் அதிவேகமாக புலிகளுக்கு எதிராக சேகரிக்கும் கையெழுத்து: பலர் கையொப்பம் வைக்கிறார்கள் !
[ Oct 25, 2014 06:12:08 AM | வாசித்தோர் : 4395 ]
கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையின் முதற்கட்டம் அமைச்சர் சி.பி ரத்நாயக்க தலைமையில் நேற்று முந்தினம் காலை ஆரம்பமானது. இந்த திட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் சி.பி ரத்நாயக்க தெரிவித்த கருத்து:-
“மீட்டெடுத்த இந்த சுதந்திரத்தையும், எரிந்து கொண்டிருந்த தேசத்திலிருந்து காப்பாற்றப்பட்ட தாய் மண்ணையும் மீண்டும் காட்டிக்கொடுக்க முடியாது என்பதை சர்வதேசத்திற்கு கூறுவதற்காக இந்த மக்கள் செயற்படுகின்றனர். இந்த தாய் மண்ணுக்கு சுதந்திரம் கிடைத்து, அதனை அனுபவிக்கின்ற இநத சநதர்ப்பத்தில் எமது பிள்ளைகளுக்காக கட்டியெழுப்பபடுகின்ற இந்த நாட்டை, ஆரோக்கியமான வளமான சந்ததியினரை உருவாக்குகின்ற இந்த நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.” என்று எல்லாம் இவர் பேசியுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1292.html
Geen opmerkingen:
Een reactie posten