அம்பாறையில் வட்டமடு பிரதேசத்தில் பதற்றம்
இதனால் இரு சாராருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு இரு குழுக்களுக்குமிடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டது. விவசாயச் செய்கையாளர்கள் தமது காணிக்கான உத்தரவுப்பத்திரம் உள்ளதாகவும் தமக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதானது சட்டவிரோதமானது என தெரிவித்தனர்.
இதேவேளை, 500க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் தமக்கான மேய்ச்சல் தரையினயே சட்டவிரோதமான முறையில் காணிப்பத்திரம் பெற்று சொந்தமாக்கியுள்ளனர் என தெரிவித்தனர். தமது ஜீவனோபாயத்தை மேற்கொள்வதற்காக கால்நடை மேய்ச்சல் நிலத்துக்;கு ஒதுக்கப்பட்ட சுமார் 4,000 ஏக்கர் நிலத்தை வழங்க்ககோரியும் நிற்கின்றனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த திருக்கோவில் பொலிஸாரும் இராணுவத்தினரும் மேற்கொண்ட பேச்சுவார்ததையைடுத்து சுமூகநிலைக்கு இரு குழுக்களும் இணக்கம் தெரிவித்தனர்.
இதனையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை (27) பொத்துவில் நீதிமன்றத்துக்கு இவ்விடயத்தை கொண்டு செல்லவுள்ளதாகவும் அதுவரை இரு தரப்பினரும் குறிப்பிட்ட வட்டமடு பிரதேசத்துக்கு செல்லக் கூடாது என்றும் திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் வேண்டப்பட்டதற்கு இணங்க இதனை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு சென்றனர்.
இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.தவம், ஏ.எம்.எம். நஸீர், திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் விவசாய திணைக்கள உயரதிகாரிகள், விவசாய மறறும் கால்நடை வளர்ப்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


http://www.jvpnews.com/srilanka/84954.html
மன்னாரில் இராணுவத்தின் இரவு ரோந்து! பீதியில் பொதுமக்கள்
இதனிடையே மன்னார் மாவட்டத்தில் இராணுவ ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு வேளைகளில் இரணுவம் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/84959.html
Geen opmerkingen:
Een reactie posten