[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 04:36.04 PM GMT ]
வரவு செலவுத்திட்ட உரையை ஆரம்பித்து உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்க்கட்சிகளை அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதியமைச்சர் லசந்த அளகியவன்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு கடந்த காலங்களில் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. அபிவிருத்திகள் மறுக்கப்பட்டிருந்தன. அதன் காரணமாக அவர்கள் புறம் தள்ளப்பட்ட நிலையில் இருந்தனர்.
ஆனால் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு அனைத்துத் துறைகளிலும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. எனினும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்னும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வரவில்லை.
தமிழ் மக்களுக்கான அபிவிருத்திகளை உரிய முறையில் கொண்டு செல்வதை உறுதிப்படுத்த அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும். அதற்காகத் தான் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார் என்றும் பிரதியமைச்சர் அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnw7.html
தமிழர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக ரணில் முயற்சி! தயாசிறி
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 05:01.15 PM GMT ]
குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய, பிங்கிரிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மூன்று தடவைகளுக்கு மேல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் என்பது பொதுமக்களின் பிரதிநிதிகள். எனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு இப்போதே தோல்விப் பயம் வந்துவிட்டது. அதன் காரணமாகத் தான் இலங்கையில் உள்ள வாக்காளர்களை விட்டுவிட்டு புலம் பெயர் தமிழர்களைத் தேடி ரணில் செல்கின்றார். அவர்களின் ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்கின்றார்.
ஆனால் ரணில் வெற்றி பெற்றால் சிங்கள, முஸ்லிம் மக்கள் இங்கு வாழ முடியாது. இந்நாடு ஈழம் நாடாகி விடும். சிங்கள, முஸ்லிம் மக்கள் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்வது தவிர வேறு வழியிருக்காது.
எனவே அனைவரும் மீண்டும் ஒன்றிணைந்து ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும். அவரது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnxy.html
பொதுபல சேனாவும், ஹெல உறுமயவும் கொள்கையளவில் ஒன்றே! ஞானசார தேரர்
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 05:26.34 PM GMT ]
அதுரலியே ரத்ன தேரரின் புதிய அரசியல் முன்னெடுப்பு தொடர்பாக இன்று அவரிடம் வினவப்பட்டபோதே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஹெல உறுமயவுடன் ஒத்துப் போக நாங்கள் தயார். ஆனால் ரத்ன தேரரின் அண்மைக்கால செயற்பாடுகளை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தை விமர்சிக்கும் அவரது நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.
அவர் ஏதோ நித்திரையில் இருந்து எழுந்த பைத்தியக்காரன் போல பிதற்றிக் கொண்டிருக்கின்றார் என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnxz.html
இலங்கையிலிருந்து கரும்புலி உறுப்பினர்கள் தப்பிச் செல்ல முயற்சி?
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 12:56.21 AM GMT ]
போலியான பெயர்களில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல கரும்புலி உறுப்பினர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இது குறித்து அரசாங்கப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 19ம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்ட தங்கலிங்கம் என்ற தமிழீழ விடுதலைப் புலி போராகளிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2002ம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றின் உத்தரவு இன்றியே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXnx0.html
Geen opmerkingen:
Een reactie posten