[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 08:59.34 AM GMT ]
இன்று குருநாகல் , குளியாப்பிட்டியவில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் குறித்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியை அறிமுகப்படுத்தியவர் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன.
இந்தப் பதவி மூலம் ஆணைப் பெண்ணாக்குவதும், பெண்ணை ஆணாக்குவதும் தவிர அனைத்தையும் செய்ய முடியும் என்றுதான் அவர் கூறினார்.
ஆனால் அவரால் முடியாத விடயம் ஜனாதிபதி மஹிந்தவினால் முடிந்துள்ளது.
ஆளுங்கட்சியில் இருக்கும் அனைவரையும் ஜனாதிபதி பெண்களைப் போன்று கோழைகளாக்கி விட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோழைத்தனமாகவே நடந்து கொள்கின்றனர் என்றும் மாதுளுவாவே சோபித தேரர் தொடர்ந்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKXno1.html
ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐ.தே.கட்சி தலைமையில் பிரதான கூட்டணி: திஸ்ஸ அத்தநாயக்க
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 09:24.03 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சியிடம் பகிரங்க கோரிக்கை விடுக்க மாதுளுவாவே சோபித தேரர் தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து கருத்து வெளியிடும் போதே திஸ்ஸ அத்தநாயக்க இதனை கூறியுள்ளார்.
மாதுளுவாவே சோபித தேரருக்கு ஆதரவு வழங்குவது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. சாதாரணமாக ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே கட்சி தனது வேட்பாளரை பெயரிடும்.
ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடத்தப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதால் தற்பொழுது ஐக்கிய தேசியக்கட்சி அதற்கு தயாராகி வருகிறது.
பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது குறித்து முடிவுகள் எடுக்கப்படவில்லை. சோபித தேரருடனும் எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம்.
ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் பலம் ஐக்கிய தேசியக்கட்சியிடம் உள்ளது. கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் இது தெளிவாகியது. மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க கூடிய எதிர்க்கட்சி கூட்டணி ஒன்றை கட்டியெழுப்புவது இங்கு முக்கியமானது.
எதிர்க்கட்சிகளின் பிரதான கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு தலைமை தாங்கும் எனவும் அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKXno2.html
Geen opmerkingen:
Een reactie posten