தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 oktober 2014

பொதுமக்கள் நலன் கருதியே இராணுவம் கண்காணிப்பில் ஈடுபடுகிறது: கிளிநொச்சி மாவட்ட படைத்தளபதி!

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் நாடாளுமன்ற தேர்தல் வேண்டும்: அமைச்சர் ஹக்கீம்
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 03:42.50 PM GMT ]
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றை தாம் எதிர்ப்பார்ப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், நேற்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் தற்போது பொதுமக்களின் வெளிப்பாடுகள் இல்லை. அங்கு கட்சி விட்டு கட்சிக்கு சென்ற பலரே உள்ளனர்.
எனவே உண்மையில் மக்கள் பிரதிநிதித்துவ சபையை முதலில் தெரிவு செய்து விட்டு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல முடியும் என்று ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலும் பொதுத் தேர்தலும் 6 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற வேண்டும் என்ற போதிலும், முன்கூட்டியே தேர்தல்களை நடத்துவதற்கு சட்டத்தில் இடமுள்ளது.
இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இந்த வார இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் கூட்டமைப்புடன் மாத்திரமல்ல, ஏனைய கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfwz.html
பொதுமக்கள் நலன் கருதியே இராணுவம் கண்காணிப்பில் ஈடுபடுகிறது: கிளிநொச்சி மாவட்ட படைத்தளபதி
[ வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2014, 03:53.39 PM GMT ]
கிளிநொச்சியில் தாம் மேற்கொண்டு வரும் கண்காணிப்புக்கள் மீண்டும் விடுதலைப்புலிகளின் மீட்சியை தடுப்பதற்காகவே என்று இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது..
கிளிநொச்சியில் தமிழ் பேசும் மக்கள், இலங்கை இராணுவம் தொடர்ந்தும் தம்மீது கண்காணிப்புகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.
முன்னர் போர் வலயமாக இருந்த கிளிநொச்சி தற்போது திறந்த சிறையாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தநிலையில் இராணுவம் புலனாய்வில் ஈடுபடுவது பொதுமக்களின் நலன் கருதியேயாகும் என்று கிளிநொச்சி மாவட்ட படைத்தளபதி சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே இராணுவ புலனாய்வாளர்கள் மக்கள் நிகழ்வுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATWKVfw0.html

Geen opmerkingen:

Een reactie posten