தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 oktober 2014

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டுமாம் சாமி !

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வலியுறுத்தியுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் தனிக்கோர்ட்டு கடந்த சனிக்கிழமை

தீர்ப்பு கூறியது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஜாமீன் கோரி அவரது தரப்பில்

தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள்

நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை அடுத்து அங்கு மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

ஜெயலலிதாவிற்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் இழிவானது மற்றும் வெட்கக்கேடானது என்று சுப்பிரமணியன் சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மோடி அரசு தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். அதன்பிறகு அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி வலியுறுத்தியுள்ளார். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மற்றும் தேசவிரோத சக்திகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
02 Oct 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1412258605&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten