[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 02:21.47 AM GMT ]
கட்சியின் வெற்றிக்காக கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு தொடர்பில் ஆளும் கட்சி அமைச்சர்களே அதிகளவில் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.
மாற்றம் தேவை என ஆளும் கட்சி அமைச்சர்களும் உணர்ந்து கொண்டுள்ளனர். ஆளும் கட்சியினர் பதற்றமடைந்துள்ளனர்.
தோல்வியின் இருண்ட கிரணங்கள் ஆளும் கட்சியின் மீது படரத் தொடங்கியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்றே ஆளும் கட்சி பிரச்சாரம் செய்து வந்தது. ஒற்றுமையின் பலம் ஊவா மாகாணசபைத் தேர்தல்களின் போது தென்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என நலின் பண்டார தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொலைகாட்சித் தொடரின் மூலம் ரணிலுக்கு சேறு பூச அரசாங்கம் திட்டம்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சேறுபூசும் நோக்கில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றைத் தயாரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
1988-89 ஆண்டுகளில் தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்களின் ஆயுதக் கலவரம் இடம்பெற்றது. கலவரத்தை அடக்குவதற்காக அரசாங்கம் கடுமையான வழிமுறைகளைப் பயன்படுத்தியது.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
இவ்வாறாக சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞர்களில் ஒரு குழுவினர் கொழும்புக்கு அருகில் பியகம பிரதேசத்தின் படலந்தை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வதை முகாம் அன்றைய ஐ.தே.க. பியகம தொகுதி அமைப்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் மேற்பார்வையில் இயங்கியதாக சந்திரிக்கா தலைமையிலான அரசாங்கம் குற்றம் சாட்டியது.
எனினும் இது தொடர்பான விசாரணைக் கமிஷன் மற்றும் நீதிமன்ற விசாரணைகளின் போது ரணில் விக்கிரமசிங்க குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது தடவையாகவும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ரணிலின் வெற்றியை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் சகல வழிகளையும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக படலந்தை வதை முகாம் தொடர்பான தொலைக்காட்சித் தொடர் ஒன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையின் ரன்மிணிதென்ன திரைப்பட நகரில் இதற்கான படப்பிடிப்பு செட் அமைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் புதல்வர் ரோஷித ராஜபக்ஷவின் மேற்பார்வையில் இந்த தொலைக்காட்சித் தொடர் தயாரிக்கப்படவுள்ளது.
படலந்தை வதைமுகாம் ரணிலின் நேரடி மேற்பார்வையில் இயங்கியதாக குற்றம் சாட்டி, அவருக்கு சேறுபூசும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ரணில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது போன்ற நிலை மீண்டும் ஏற்படலாம் என்று அச்சமூட்டுவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இந்த தொலைக்காட்சித் தொடரை உருவாக்குவதற்காக மக்களின் வரிப்பணத்தில் இரண்டரைக் கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATVKVgx3.html
சுதந்திரக் கட்சி உறுப்பினர்களைக் குழப்பிய ஜனாதிபதி மகிந்த
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 02:17.32 AM GMT ]
இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்த காரணத்தினால், இம்முறை தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் பரவாயில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“நான் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகித்தேன் தானே, தற்போது நான் கேட்டாலும் கேட்காவிட்டாலும் பரவாயில்லை” என தெரிவித்துள்ளார்.
இதன் போது “சேர் போட்டியிடாவிட்டால் நான் போட்டியிடுவேன்” என மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்த மத்திய செயற்குழு உறுப்பினர் ஓர் மாகாணசபையின் ஆளும் கட்சி அமைச்சர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றதன் பின்னர் சில ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறித்த மாகாண அமைச்சரின் அறிவிப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVgx2.html
Geen opmerkingen:
Een reactie posten