[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 01:53.52 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலையைமகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாப்பரசருக்கு இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுக்க ஜனாதிபதி வத்திகான் செல்கிறார். அவருடன் வருமாறு எனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கிறிஸ்தவ விவகார அமைச்சர் என்ற வகையிலும் கத்தோலிக்க பக்தன் என்ற வகையிலும் நான் ஜனாதிபதியுடன் இந்த பயணத்தை மேற்கொள்கிறேன்.
கட்சியின் அனுமதியுடன் நான் ஜனாதிபதியுடன் நாளை இத்தாலி புறப்பட்டுச் செல்கிறேன் எனவும் ஜோன் அமரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐ.தே.க நிபந்தனை
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் பணிகளை கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு அழைக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தமது கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நீதியாகவும் சுதந்திரமானதாகவும் நடத்தப்படுவதாக கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் இன்று தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை ராஜகிரியவில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே திஸ்ஸ அத்தநாயக்க இதனை கூறியுள்ளார்.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தேர்தலின் இறுதிக்கட்டத்திலேயே வருகின்றனர். இதன் காரணமாகவே தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட வேண்டும் என நாங்கள் தெரிவித்துள்ளோம்.
இதன் மூலம் சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இது குறித்து தேர்தல் ஆணையாளர் சிறந்த பதிலை வழங்கியதுடன் கோரிக்கை தொடர்பில் விசேட கவனத்தை செலுத்தினார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட குறைந்தது 45 நாட்கள் தேவை. ஆனால், குறுகிய காலத்தில் தேர்தல் அறிவித்து நடத்தினால், அரசாங்கம் அரச பலத்தையும் அரச வளங்களை பயன்படுத்தி தேர்தலை முன்னெடுக்க முயற்சிக்கலாம்.
இதனால், தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க குறைந்தது 45 நாட்கள் தேவை என தேர்தல் ஆணையாளரிடம் தெரிவித்தோம்.
தேர்தலை சுதந்திரமான நடத்த வேண்டும் என்ற அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளில் இருந்து தேர்தல் ஆணையாளர் விடுபட முடியாது எனவும் அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfr6.html
அரசாங்கத்தால் வடக்கு தமிழர்களின் மனங்களை வெல்ல முடியாது: அமைச்சர் ராஜித
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 04:12.52 PM GMT ]
கடற்றொழில் அமைச்சின் உதவியுடன் கூட்டுறவு திணைக்களத்தினால் யாழ். அரியாலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மீன் சந்தை திறப்பு விழாவில் இன்றைய தினம் கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எமக்குத் தெரியும். அதேபோன்று இந்தமக்களின் தேவைகளும் எமக்குப் புரியும். இந்த மக்களின் உரிமைகளுக்காக கடந்த காலங்கள் முதல் இன்றுவரை பல்வேறு வழிகளிலும் மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றோம்.
இங்குள்ள அரசியல் கட்சிகளில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியினர் ஆரம்பகாலம் முதலே எம்மோடு இணைந்த உறவாக செயற்பட்டு வருகின்றனர். அதேபோன்று தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபையும் எம்முடன் இணைந்து செயற்படுகின்றது.
மாகாண அமைச்சர் மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு அரசியலுக்கப்பால் எம்முடன் இணைந்து செயலாற்றி வருகின்றார்.
இதற்கமைய வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் என்னைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இதன்போது வடக்கு மீனவர்களின் தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இதற்கமைய வடக்கிற்குத் தேவையான கடற்தொழில் உபகரணங்கள் அனைத்தையும் மாகாண சபையினூடாக மேற்கொள்வதென்றும் வடக்கு கிழக்கிற்கு சென்று நிலைமைகளைப் பார்வையிடுவதற்கு அதிகாரிகள் அச்சம் கொண்டிருந்த வேளையிலும் உடனடியாக நிலைமைகளைப் பர்வையிடுமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருக்கின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfsz.html
Geen opmerkingen:
Een reactie posten