தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 oktober 2014

உயர் அதிகாரிக்காக கூலி வேலை செய்யும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

மன்னார் பொலிஸ்  உயர் அதிகாரி ஒருவரின் ஹொட்டல் நிர்மாணப் பணிகளில் கடைநிலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மதவாச்சியில், மன்னார் பொலிஸ் பிரிவில் கடமையாற்றிவரும் உயர் பொலிஸ் அதிகாரிக்கு சொந்தமான ஹொட்டல் ஒன்றின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சொந்தப் பணிகளில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டமைக்கு பொலிஸார் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களாக அனுராதபுரம் மதவாச்சி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹொட்டலில் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாள் தோறும் காலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டதன் பின்னர் இந்தபொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் கப் ஒன்றின் மூலம் மதவாச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
மாலையில் மீண்டும் கப் வண்டியில் மன்னாருக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
நாளொன்றுக்கு 168 கிலோ மீற்றர் வரையில் இந்த கப் வண்டி பயணம் செய்வதாகவும், இது பொலிஸ் அதிகாரியின் தனிப்பட்ட தேவைக்காகவே எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான எரிபொருட்கள் பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
பொலிஸ் உயர் அதிகாரியின் ஹொட்டல் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுவரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ் திணைக்களம் சம்பளம் வழங்கி வருகின்றது.
மேலும் பொலிஸ் உயர் அதிகாரியின் மனைவி, இந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை கடுமையாக நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து இதுவரையில் விசாரணைகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmv7.html

Geen opmerkingen:

Een reactie posten