[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 12:58.44 AM GMT ]
இந்திய அரசாங்கத்தரப்பு தகவல்படி, அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இது தொடர்பில் இந்தியாவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டொவால் ஆகியோர் இந்தியாவின் நிலைப்பாட்டை கோத்தபாயவுக்கு தெளிவுபடுத்தினர்.
கடந்த செம்டெம்பர் மாதம் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கைக்கு சென்றமை, மற்றும் இதற்கு முன்னர் சீனாவின் கடற்படை கப்பல் இலங்கைக்கு சென்றமை குறித்து இந்தியா கவலையை வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARbKXmwz.html
சஜின் வாஸிற்கு எதிராக நோனிஸ் வழக்குத் தாக்கல்?
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 01:11.11 AM GMT ]
பிரிட்டனுக்கான இலங்கை முன்னாள் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் இந்த வழக்கினைத் தொடரத் தீர்மானித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வைத்து கடந்த செப்டெம்பர் மாதம் தம்மை தாக்கியதாக நோனிஸ் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவத்தில் தமது பற்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே, தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளதாக நோனிஸ் நெருங்கியவர்களிடம் தெரிவித்துள்ளார்.
விரைவில் இலங்கை நீதிமன்றில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து நோனிஸ் வழக்குத் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாக்குதல் சம்பவம் நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சில ராஜதந்திரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சஜின் - நோனிஸ் சம்பவம் குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம்?
வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவிற்கும், பிரிட்டனுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸிற்கும் இடையிலான மோதல் சம்பவம் குறித்த அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
சம்வபவம் தொடர்பில் தெரிந்த 28 பேரின் எழுத்து மூல தகவல்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மோதல் சம்பவமொன்று இடம்பெறவில்லை என்றே பெரும் எண்ணிக்கையிலானவர்கள் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜதந்திர சேவையைச் சேர்ந்த சில உயர் அதிகாரிகளும் இந்த அறிக்கையில் சாட்சியமளித்துள்ளனர்.
இந்த அறிக்கையில் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு சார்பான வகையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் நோனிஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தாக்குதல் சம்பவம் இடம்பெறவில்லை என அறிக்கை வெளியிடப்படுவதன் மூலம் இலங்கையின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்படக்கூடுமென முன்னாள் ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARbKXmw0.html
ஜனாதிபதி - ஹெல உறுமயவுக்கிடையிலான முரண்பாடு: தீர்க்கும் முயற்சியில் கோத்தபாய
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 01:23.00 AM GMT ]
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி மஹிந்தவிடம், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவா் அதுரலிய ரதன தேரர் கோரியிருந்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக உரிய பதிலளிக்கப்படாவிட்டால், அரசாங்கத்தை விட்டு வெளியேறி, ஜனாதிபதிக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்திருந்தது.
வரவு செலவுத் திட்டம் குறித்த வாக்கெடுப்பின் போதும் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிப்பது என ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்திருந்தது.
எனினும் இந்த முரண்பாட்டு நிலைமையை தீர்த்து வைக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய மற்றும் அமைச்சர் டலஸ் அழப்பெரும ஆகியோர் முயற்சித்து வருகின்றனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வுத் திட்டமொன்றை எட்டும் முயற்சிகளில் இருவரும் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சி நேற்று அவரச கூட்டமொன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முடிவுக்கு வருகிறது முறுகல்: ஹெலஉறுமயவுக்கு உறுதிமொழிக் கடிதம் வழங்க ஜனாதிபதி முடிவு?
அரசாங்கத்துக்கும், ஹெல உறுமயவிற்கும் இடையிலான முறுகல் நிலை இன்று மாலை தணியும் என்று அலரி மாளிகைத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை ஜனாதிபதி மற்றும் ஹெல உறுமய பிரதிநிதிகளுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதன்போது ஜாதிக ஹெல உறுமயவின் கோரிக்கைகளை தேர்தலுக்குப் பின்னர் நிறைவேற்றித் தருவதாக உத்தரவாதமளிப்பதற்கு முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எழுத்து மூல உத்தரவாதமொன்றை வழங்கத் தயாராக இருக்கின்றார் எனவும் தெரியவருகின்றது.
இதற்கு முன்னரும் கடந்த 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி ஹெலஉறுமயவுடன் ஒப்பந்தமொன்றை செய்து கொண்டிருந்தார்.
அதே போன்ற ஒப்பந்தமொன்று இம்முறையும் இருதரப்பினருக்குமிடையில் கைச்சாத்திடுவது குறித்த முன்மொழிவு இன்று ஹெல உறுமய பிரதிநிதிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
பெரும்பாலும் ஹெல உறுமயவும் இந்த உத்தரவாதத்தை ஏற்று,அரசுடன் புதிய ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள இணக்கம் தெரிவிக்கும் மனோநிலையில் இருப்பதாக அக்கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்றும் அமைச்சர்களான பசில், டளஸ் மற்றும் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோர் அரச தரப்பின் பிரதிநிதிகளாக ஹெல உறுமயவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிகின்றது.
இதற்கிடையே எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தி, மாதுளுவாவே சோபித தேரரை ஆளும் கட்சியின் பக்கம் இழுத்து வருவதற்காக, ஜனாதிபதியின் ஆலோசனையின் போரில் ஹெல உறுமய மேற்கொண்ட நாடகமே இந்த முறுகல் நிலை என்றும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszARbKXmw1.html
வட மாகாணசபைக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் உரியமுறையில் பயன்படுத்தவில்லை: அரசாங்கம் குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 12:50.06 AM GMT ]
இந்த குற்றச்சாட்டை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுமத்தியுள்ளார்.
வடக்கு மாகாணசபைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு தொகை மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.
எனவே வடக்கு மாகாணசபைக்கு நிதி தேவையில்லையா? அல்லது நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியவில்லையா? என்பது புரியவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணசபை, புலம்பெயர்ந்த தமிழர்களுக்காகவே பணியாற்றுகிறது. பொதுமக்களை அது கவனிப்பதில்லை என்றும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதை வைத்துப் பார்த்தால், இலங்கை அரசாங்கத்தால் வடக்கு மக்கள் புறக்கணிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARbKXmwy.html
Geen opmerkingen:
Een reactie posten