[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 03:05.12 PM GMT ]
லெப்டினன்ட் ஜெனரல் ஹி லி வைஸ் தலைமையில் இந்தக்குழு இலங்கை சென்றது.
இந்தக்குழுவில் சீன இராணுவத்தின் இராணுவக் கொள்கை தொடர்புடைய அதிகாரி ஆராய்ச்சி பகுதியை சேர்ந்தவர், இராணுவ முகாமைத்துவப் பிரிவை சேர்ந்தவர் மற்றும் வெளிநாட்டு அமைச்சை சேர்ந்தவர் ஆகியோர் உள்ளடங்கியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு இலங்கையில் இராணுவத்தளபதி உட்பட்ட பல அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.
எனினும் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszARbKXlq5.html
மஹிந்தவுக்கு கொடி பிடித்து மக்களிடம் திட்டு வாங்க முடியாது! ஊடகவியலாளர்கள் தெரிவிப்பு
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 03:55.37 PM GMT ]
ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் தேர்தல் தொகுதி தோறும் ஆளும் கட்சிக்கு ஆதரவான ஊடகவியலாளர்கள் குழுவொன்று தெரிவு செய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சந்திரபால லியனகேயின் திட்டத்தின் பிரகாரம் இந்த தெரிவு சில மாதங்களுக்கு முன் நடைபெற்றிருந்தது.
ஆளும் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட குறித்த ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டிருந்தன. தேவையான மேலதிக உபகரணங்களும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தேர்தல் தொகுதிதோறும் நடந்துள்ள அரசின் அபிவிருத்திகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் குறைபாடுகள், அவர்களுக்கிடையிலான சிறு பிணக்குகள், எதிர்க்கட்சி ஆதரவாளர்களின் சட்டவிரோத செயற்பாடுகள் என்பனவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை தயாரிப்பது இவர்களுக்கு வழங்கப்பட்ட பணியாகும்.
மேலும் ஒவ்வொரு ஊடகவியலாளரும் அரசின் அபிவிருத்திகள் தொடர்பில் ஒரு இறுவட்டு தயாரித்துக் கொடுத்தால் அதற்கு தனியாக 40 ஆயிரம் ரூபா கொடுக்கவும் உறுதிமொழி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்தக்குழுவில் இருந்த பல ஊடகவியலாளர்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பிரச்சாரத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டுள்ளார்கள். மஹிந்தவுக்கு ஆதரவான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மக்கள் மத்தியில் தங்கள் மீதான மரியாதை கெட்டுவிடும் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதன் காரணமாக ஜனாதிபதிக்கு ஆதரவான நாடு தழுவிய ஊடகப் பிரச்சார முயற்சி, ஆரம்ப நிலையிலேயே கைவிடப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARbKXlq6.html
அரளிவிதை சாப்பிட்ட மாணவர்கள் 13 பேர் மருத்துவமனையில் அனுமதி
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 04:01.06 PM GMT ]
இன்று புத்தளம் பிரதேசத்தில் உள்ள மகாஎளிய பாடசாலையில் மதிய உணவு இடைவேளையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பாடசாலை நேரத்தில் மாணவர்கள் அரளி விதை உட்கொண்ட சம்பவம் தெரிய வந்ததும் அப்பகுதியில் பெரும் பதற்ற நிலை உருவானது.
பெற்றோர்கள் பாடசாலை நோக்கித் திரண்டு வந்ததால்,கலவர நிலையும் ஏற்பட்டது.
எனினும் பாடசாலையின் அதிபரின் சாமர்த்திய முயற்சி காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARbKXlq7.html
எதிர்க்கட்சி உறுப்பினர்களால் இன்று நாடாளுமன்றத்தில் உலக சாதனை
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 04:03.45 PM GMT ]
இதன்போது அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, நாடாளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்காமையானது உலக சாதனை என்று வர்ணித்தார்.
எனினும் குறுக்கிட்ட சபாநாயகர் சமல் ராஜபக்ச, அமைச்சர்களும் கேள்வி நேரத்தின்போது நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகாமையை சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இன்றும் பல அமைச்சர்கள் அமர்வில் பங்கேற்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை தமது உறுப்பினர்களில் பெரும்பாலானோர் நீதிமன்ற வழக்கு ஒன்றுக்கு சென்றமையால் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க முடியவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதில் வழங்கினார்.
http://www.tamilwin.com/show-RUmszARbKXlry.html
ஜனாதிபதி - ஜாதிக ஹெல உறுமய ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 04:10.41 PM GMT ]
அலரி மாளிகையில் இந்த சந்திப்பு தற்போது நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர், அதுரலிய ரதன தேரர், பாட்டலி சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில, நிசாந்த சிறிவர்னசிங்க ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பு மிகவும் தீர்மானம் மிக்கது என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இந்த சந்திப்பின் பின்னர் ஜாதிக ஹெல உறுமய தீர்மானம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி கோபமடைந்து இடைநடுவில் எழுந்து சென்று விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் இன்றைய சந்திப்பில் இணக்கப்பாடு எட்டப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszARbKXlrz.html
அடிப்படைவாதிகளால் இலங்கை முஸ்லிம்களுக்கு ஆபத்து! ரவூப் ஹக்கீம்
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 04:19.20 PM GMT ]
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள அடிப்படைவாத அமைப்புகளின் செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம்களுக்கு ஆபத்தான நிலை தோன்றியுள்ளது.
அடிப்படைவாத சக்திகளின் செயற்பாடுகள் தற்போது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக முஸ்லிம்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்னர்.
விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றிக்குப் பின்னர் முஸ்லிம்கள் மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது. இதனை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.
தமிழர்களின் நிலையிலும் எதுவித முன்னேற்றங்களும் இல்லை. இவ்வாறான நிலையில் சிறுபான்மை இனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள சந்தர்ப்பத்தில் இலங்கையின் முக்கிய முஸ்லிம் அமைச்சரான ரவூப் ஹக்கீம் அண்மையில் சவூதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் காரணமாக அவரிடம் நேர்காணல்களைப் பெற அங்குள்ள ஊடகங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியதாக அறிய முடிகின்றது.
அதன் போது வழங்கிய பேட்டியொன்றில் பௌத்த அடிப்படைவாதத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தாது போனால் பிராந்திய நெருக்கடி ஏற்படும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எச்சரித்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszARbKXlr0.html
Geen opmerkingen:
Een reactie posten