[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 04:21.18 PM GMT ]
ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ஹரினுக்கும், மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்காவுக்கும் இடையில் பிரிக்கவே முடியாத இறுக்கமான நட்பு நிலவுகின்றது.
இந்நிலையில் ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஹிருணிக்காவும் பதுளை சென்றிருந்தார். அரசாங்கத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அவர், ஹரினின் பரம எதிரியான தயாசிறி ஜயசேகரவுடன் ஒன்றாக சுற்றித்திரிந்தார்.
இதன் காரணமாக ஹரின்-ஹிருணிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த நாட்களில் ஹிருணிக்காவும் கனத்த மௌனத்துடன் அமைதியாக இருந்தார்.
இதற்கிடையே ஹிருணிக்காவின் பிறந்தநாள் கடந்த சில நாட்களுக்கு முன் வந்துள்ளது. அதன் போது பழைய பகை மறந்து ஹரினும் தொலைபேசி வழியே ஹிருணிக்காவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஹரினின் தொலைபேசி அழைப்பு வந்த மகிழ்ச்சியில் காருக்குள் துள்ளிக் குதித்த ஹிருணிக்கா, உட்கார்ந்த நிலையிலேயே நடனமாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தனது தந்தையின் பாரம்பரிய கட்சியான சுதந்திரக் கட்சியை விட்டு விலகி, ஹரினுக்காக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவும் ஹிருணிக்கா தயாராகி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmr2.html
வசந்த முன்னே, ஏனையவர்கள் பின்னே! ஆளுங்கட்சிக்கு குட்பை சொல்லத் தயார்?
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 04:35.22 PM GMT ]
வரவு-செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இனிவரும் நாட்களில் ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்சி தாவும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இது தொடர்பில் ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் வெறுமனே பேசிக்கொண்டு காலத்தைக் கடத்தாமல், ஒருவராவது எதிர்க்கட்சி வரிசைக்குத் தாவி சிக்னல் கொடுக்க வேண்டும் என்று ஐ.தே.க. நிபந்தனை விதித்துள்ளது.
இதனையடுத்து வரும் வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க எதிர்க்கட்சிக்குத் தாவ தயாராகி விட்டார். அவரையடுத்து ரஜீவ விஜேசிங்க உள்ளிட்டோர் கட்சி தாவ உள்ளனர். இவ்வாறு ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் ஐந்து கட்டங்களாக கட்சி மாறும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmr3.html
Geen opmerkingen:
Een reactie posten