தமிழக முதல்வரின் சிறையடைப்பை அடுத்து தமிழர்கள் சுயாதீன வழியை தெரிவு செய்ய வேண்டியுள்ளனர்: கஜேந்திரகுமார்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 04:06.26 AM GMT ]
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய அரசாங்கத்தை பொறுத்தவரை, அது தமிழர் நலன் என்ற ரீதியில் மாத்திரமல்லாமல் பிராந்திய நலனிலேயே அதிக அக்கறையை வெளிப்படுத்தும்.
எனினும் தமிழகத்தை பொறுத்தவரை அது, இலங்கைத் தமிழர்களின் நலனில் முதன்மை அக்கறையை செலுத்தும்.
இந்தநிலையில் ஜெயலலிதாவின் கைது காரணமாக தமிழகத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது.
அதேநேரம் ஜெயலலிதாவின் சிறைத் தண்டனையானது, தமிழகத்தின் கட்சிகள் இலங்கை விடயத்தில் தனித்த முடிவு ஒன்றை எடுக்க வேண்டிய முக்கிய செய்தியை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnrz.html
மனித உரிமை பேரவைக்கு விசுவாசமாக நடக்குமாறு மஹிந்தவிடம், பான் கீ மூன் கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 04:01.20 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குழுவினரை நியூயோர்க்கில் வைத்து சந்தித்த போது மூன் இதனை வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இதனை இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் எதிர்ப்பை காட்டி வருகிறது.
இந்த நிலையில் குறித்த விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பான் கீ மூன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.
இதேவேளை மதத்தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து மூன் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில் பான் கீ மூனுடனான சந்திப்பு தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலில், போருக்கு பின்னர் இலங்கையின் நிலவரம் குறித்து கலந்துரையாடியதாக மாத்திரம் குறிப்பிடப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnq7.html
Geen opmerkingen:
Een reactie posten