அலஸ் குறொஸ் என்னும் 14 வயதுச் சிறுமி கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் திகதி காணமல் போயிருந்தார். லண்டனில் உள்ள ஈலிங் பகுதியில் மதியம் சுமார் 1 மணிக்கு தனியாக நடந்துசென்ற அலஸ் வீடு திரும்பவில்லை என்று பொலிசில் அவர் பெற்றோர்கள் புகார் செய்தார்கள். வழமையாக பருவ வயது பெண் காணாமல் போவது என்றால், அவர் காதலனுடன் எங்காவது சென்றிருப்பார் என்று தான் லண்டனில் முதலில் நினைப்பார்கள். ஆனால் சுமார் 1 மாதமாக தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதேவேளை அவர் உடலும் கிடைக்காததால், அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்று பொலிசார் நம்பினார்கள். இதேவேளை சில தினங்களுக்கு முன்னதாக அலஸ் குறொஸ் என்னும் அப் பெண் வசித்துவரும் வீட்டிற்கு அருகாமையில் உள்ள தடாகம் ஒன்றில் ஏதோ மிதப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைக்கவே அவர்கள் விரைந்து சென்று அதனை கரைக்கு கொண்டுவந்தார்கள்.
ஒரு பாலித்தீன் பையில் நன்று கட்டப்பட்டு, மேலும் கிளீ ன் பில்ம்( clean film) என்று சொல்லப்படும் மெல்லிய பாலித்தீன் உறையால் ஒரு பெண்ணின் உடல் சுற்றப்பட்டு காணப்பட்டது. குறித்த சடலம் தண்ணீருக்கு மேலே வராமல் இருக்க, அதில் பாரமும் கட்டப்பட்டு இருந்தது. ஆனாலும் சடலம் மேலே வந்து மிதக்க ஆரம்பித்துவிட்டது. அலஸ் குறொஸ் கொலைசெய்யப்பட்டு சுமார் 30 நாட்கள் கழித்தே கொலையாளி சிறுமியின் உடலை நன்கு, நிதானமாக உருமறைப்புச் செய்துள்ளார். அத்தோடு அருகில் உள்ள எவரும் பார்காத நேரத்தில் குளத்தில் போட்டும் உள்ளார். இதனை அறிந்த பொலிசார் இந்த வழக்கை உடனடியாக ஸ்காட்லன் யாட் பொலிசாரிடம் கொடுத்தார்கள். அவர்கள் துப்பு துலக்க ஆரம்பித்து , சில மணி நேரங்களில் எல்லாம், வீதியோர CCTV கமராக்களில் உள்ள பதிவுகளை பார்வையிட்டர்.
அலஸ் குறொஸ் என்னும் அச்சிறுமி மதிய நடந்துசென்றவேளை, CCTV கமரா ஒன்றில் பதிவாகி இருந்தார். அவர் பின்னால் சைக்கிளில் ஒரு நபர் செல்வதும் கூடவே பதிவாகி இருந்தது. அன் நபர் யார் என்று பொலிசார் உடனே துப்பு துலக்க ஆரம்பித்தார்கள். முகத்தை வைத்து குற்றவாளிகளை கண்டறியும் பல சாதனங்களை அவர்கள் பாவித்து, பல தொழில் நுட்ப்பங்களை கையாண்டு, இறுதியாக அவர் ஒரு லட்டிவீய நாட்டுப் பிரஜை என்றும் அவர் லண்டனில் வேலைசெய்பவர் என்று கண்டு பிடித்தார்கள். அவர் பெயர் ஆனிஸ் சல்காணிஸ். குறித்த நபர் பிறிதொரு கொலைவழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது. லட்வியா நாட்டில் ஆனஸ் தேடப்படும் நபர் என்பதும் தெரியவந்தது. ஆனஸ் சல்காணிஸை வலைபோட்டு தேட ஆரம்பித்தார்கள் பொலிசார். குறித்த நபரின் போட்டோவை பத்திரிகையில் போட்டு, தேடி அலைந்தார்கள்.
கொலை நடைபெற்ற சுற்றுவட்டாரத்தில் எல்லாம் தேடுதல் நடத்தினார்கள். ஆனால் ஆனஸ் கிடைக்கவில்லை. பெரும் குழப்பத்தில் இருந்த ஸ்காட்லன் யாட் பொலிசாருக்கும் மேலும் ஒரு பலத்த அதிர்சி வந்துள்ளது. அது என்னவென்றால் , நேற்றைய தினம் அதே பகுதியில் உள்ள பூங்கா ஒன்றின் மறைவிடத்தில் இருந்து ஆனஸ் சல்காணிஸ் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் துர்நாற்றத்தோடு அவர் உடல் காணப்படுகிறது. மிகவும் கெட்டுப்போன நிலையில் உள்ள அந்த சடலம் ஆனஸ்சின் உடையது தான் என்று பொலிசார் உறுதிசெய்துள்ளார்கள். அப்படி என்றால் கொலையாளி என்று பொலிசார் ஒருவரைத் தேட, அவரே கொலைசெய்யப்பட்டு பற்றையில் இருக்கிறார் என்றால் உண்மையில் என்ன தான் நடந்தது என்று தெரியவில்லை. இதேவேளை தனது மகள் மிகவும் பயந்த சுபாவம் உடையவர். அவருக்கு அதிகம் நண்பர்களே கிடையாது என்கிறார்கள் பெற்றோர். அப்படிப் பார்த்தால் கூட 38 வயதுக்கு மேல் உள்ள மற்றும் விகாரமான உருவம் கொண்ட நபர் ஒருவரை, இச் சிறுமி நண்பராக வைத்திருந்திருக்கவும் முடியாது.
அன்றைய தினம் என்ன தான் நடந்தது ? என்று பொலிசார் மட்டும் அல்ல பிரித்தானியாவில் உள்ள பல மக்கள் குழப்பிப்போய் தான் உள்ளார்கள். ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். ஆனால் ஸ்காட்லன் யாட் பொலிசார் இதனைச் சும்மா விட்டபாடாக இல்லை. மேலதிக பொலிஸ் படையைப் போட்டு, இன்னும் கடுமையாக துப்பு துலக்க ஆரம்பித்துள்ளார்கள். இனி வரும் தகவல்கள் அதிரலாம். ஆனால் அவை அதிர்வில் நிச்சயம் வெளியாகிக்கொண்டு இருக்கும். அதுவரை , அதிர்வின் விசேட செய்திகளோடு இணைந்திருங்கள்.
Geen opmerkingen:
Een reactie posten