யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தினை பார்வையிட வருகின்ற மக்கள் தங்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என புகையிரத நிலைய அதிபர் நாராயணசாமி தபேந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை கடந்த 13 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவால் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தினை பார்வையிட பெருமளவான மக்கள் தினமும் வருகை தருவதாக புகையிரத நிலைய அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தினைப் பார்வையிட வருகின்ற பொதுமக்கள் நிறுத்தப்பட்ட புகையிரதங்களில் ஏறி இறங்குவதனால் அனர்த்தங்கள் ஏற்படக்ககூடிய வாய்ப்பு காணப்படுவதாக தெரிவித்த நா. தபேந்திரன், மக்கள் தம|து பாதுகாப்பில் அக்கறை செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அத்துடன் புகையிரதத்தினை தமது குழந்தைகளுக்கு காண்பிக்கும் நோக்கில் குழந்தைகளை அழைத்துவரும் பெற்றோர்கள், அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புகையிரதங்களில் ஏறும் போதும், இறங்கும் போதும் அல்லது புகையிரத பாதையினை கடக்கும் போதும் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்ததுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை ஆரம்பித்த 10 நாட்களில் சராசரியாக 60 லட்சம் ரூபா கிடைத்துள்ளதாகவும் கடந்த 20 ஆம் திகதியில் இருந்து வழமையான புகையிரத சேவையின் முன்பதிவுகள் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 45 நாட்களுக்கு முன்னரே மக்கள் தமது ஆசனப் பதிவுகளை பதிவு செய்யக்கூடிய வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக தபேந்திரன் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmv4.html
Geen opmerkingen:
Een reactie posten