லண்டனில் மாபெரும் கண்டனப் போராட்டம் நாளை மாலை 4:30 இலிருந்து 6:30 வரை WC2B 4NA, Aldwych இல் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்திற்கு முன்னால் நடைபெற உள்ளது.
தமிழ் மக்கள் உரிமைகளுக்காக, தமிழ்த் தேசிய உணர்வோடு தம்மையே அர்ப்பணித்துப் போராடிக் கொண்டிருக்கும் தமிழக மாணவர்களான, மாணவர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செம்பியன், மாணவர் இளையோர் அமைப்பைச் சேர்ந்த பிரதீப் ஆகியோர் மூவரும் தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் மீது பல்வேறு குற்றங்கள் புனையப்பட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன.
மாணவர்களின் உரிமைகளை மதிக்காமலும் அவர்களின் பேச்சுரிமையை மறுத்தும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இக்கைது நடவடிக்கையைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் கண்டனப் போராட்டம் லண்டனில் நடாத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2009 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு மற்றும் திட்டமிடப்பட்ட வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் தமிழினக் கருவறுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் துணிவோடு போராடி வரும் இம்மாணவர்களை தமிழகக் காவல் துறையினர் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி நடைபெறும் இக்கண்டனப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களையும் உணர்வோடு கலந்து கொள்ளுமாறு பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmv5.html
Geen opmerkingen:
Een reactie posten