[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 02:24.48 PM GMT ]
இன்று நண்பகல் யாழ். நகர விடுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறிப்பிட்ட அளவிலான சிவில் பிரதிநிதிகளே இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்புக்கு ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், சந்திப்பு முடிந்து அவர்கள் வெளியேறும்போது மட்டும் புகைப்படம் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கமலேஷ் சர்மா, வடமாகாண ஆளுநர் சந்திரசிறியை இன்று காலை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmv3.html
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்! மேன்முறையீடு செய்யுமாறு ரணில் கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 02:05.58 PM GMT ]
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க,
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அரசாங்கம் துணியாத போது ஐரோப்பாவில் உள்ள விடுதலைப் புலிகளின் பெருமளவு சொத்துக்கள் மீண்டும் கே.பி குழுவுக்கு சென்றடைந்து விடும்.
எனவே அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் விடுதலைப்புலி தடை நீக்கத்துக்கு எதிரான மேன்முறையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.
எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை இல்லாமையால் குறித்த மேன்முறையீட்டை அரசாங்கத்தினால் நேரடியாக மேற்கொள்ள முடியாது என்று இலங்கை அரசாங்கம் கூறிவருவதையும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கையின் சார்பில் குறித்த மேன்முறையீட்டை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmv2.html
Geen opmerkingen:
Een reactie posten