தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 oktober 2014

தமிழீழத்திற்கு பாதை அமைக்கும் முஸ்லிம் காங்கிரஸ்: தேசிய சுதந்திர முன்னணி!

மலையகத்தில் சிறுவர்தின நிகழ்வு (மலையக செய்திகள்)
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 10:47.53 AM GMT ]
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் அசோக சேபால அவர்களின் அழைப்பின் பெயரில் ஏற்பாடு செய்யும் அறிவு பூர்வமான ஸ்ரீலங்கா மிஸ்டர் பீன் அவர்களினால் வினோத கேளிக்கை நிகழ்ச்சி ஒன்று தலவாக்கலை கதிரேசன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கு தலவாக்கலை நகரில் உள்ள முன்பள்ளி சிறுவர்கள் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வுக்கு தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது சிறுவர்களுக்கு பல் சிகிச்சை முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
மலையகத்தில் புலமைபரிசிலில் சித்தி பெற்ற மாணவர்கள்
இவ்வருடத்தின் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தின கல்விக்கற்கும் முத்துகுமார் கவாஸ்கர் 185 புள்ளிகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 6ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
இவர் பசுமலை கொலனியை சேர்ந்த முத்துகுமார் கௌரி தம்பதிகளின் புதல்வன் இவருக்கு அதிபர் ஆசிரியர்கள் பாராட்டுக்களை தெரிவிக்கின்றார்கள்.
மேலும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் லிந்துல மெராயா தமிழ் மகா வித்தியாலயத்தின மாணவர்கள் மூவர் சித்தியயடைந்துள்ளனர்.
இவர்கள் லிந்துல ஹென்போல்ட் கனகராஜ் இந்துராணி தம்பதிகளின் புதல்வி செல்வி தர்ஷிகா (167) மெராயா ஜெகதீஷன் சித்திராவத தம்பதிகளின் புதல் செல்வி மதுஹரணி (166) சிவகுமார் ரேணுகா தேவி தம்பதிகளின் புதல்வன் செல்வன் மிதுர்ஷன (165) ஆகியோர் சித்தியடைந்துள்ளதுடன் நாற்பத்திரண்டு மாணவர்கள் 125க்கும் அதிகமான புள்ளிகளையும் பெற்றுள்ளார்கள்.
இவர்களுக்கு அதிபர் ஆசிரியர்கள் பாராட்டுக்களை தெரவித்துக்கொண்டுள்ளார்கள்.
முதியோர் தினத்தைக் கொண்டாடிய மாணவர்கள்
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு மஸ்கெலியா சென்.ஜோசப் தமிழ் மகா வித்தியாலய தரம் 5 ஆண்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அதிபர் ஆகியோர் இணைந்து எல்லோருக்கும் முன் உதாரணமாக இருக்கும் வகையில் இந்த முதியோர் தினத்தை இன்று விஷேடமான முறையில் கொண்டாடினார்கள்.
அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட நோட்டன் பிரீட்ஜ் சந்திரா விஜயரட்ண முதியோர் இல்லத்திற்கு சென்று பெரும்பாலான சிங்கள இன முதியோர்கள் இருக்கும் இந்த இல்லத்திற்கு சென்று முதியோர்களுக்கு உணவு உட்பட அத்தியவசிய பொருட்களை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளதோடு முதியோர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.

ஐ.தே.க எம்பிக்கு செயற்கை கால் பொருத்தப்படவுள்ளது
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 11:01.02 AM GMT ]
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த விபத்து ஒன்றில் கால் பாதத்தை இழந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெருமவுக்கு செயற்கை காலை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட உள்ள அந்த செயற்கை காலின் பெறுமதி சுமார் 10 லட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் அவரது காலில் ஏற்பட்ட காயங்கள் குணமாகியுள்ளதுடன் தையல்களும் வெட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் மீண்டும் அரசியலில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ள மன்னப்பெரும, சக்கர நாற்காலியில் சென்றாவது வரவு செலவுத்திட்ட விவாதத்தல் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfry.html


தமிழீழத்திற்கு பாதை அமைக்கும் முஸ்லிம் காங்கிரஸ்: தேசிய சுதந்திர முன்னணி
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 11:24.09 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்காலம் என்பது தமிழீழத்திற்கு பாதை அமைக்கும் எதிர்காலமா, என தேசிய சுதந்திர முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தமிழர்களும் ,முஸ்லிம்களும் இணைய வேண்டிய காலம் வந்துள்ளது. இரு தரப்பும் இணைந்தால் மாத்திரமே எதிர்காலம் உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி அண்மையில் தெரிவித்திருந்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகத்தின் கருத்தின் பாரதூரமான நிலைமையை இலங்கையின் மக்களுக்கு குறிப்பாக நாட்டின் வாழும் முஸ்லிம் மக்களுக்கு விளக்கப்படுவது தேசிய சுதந்திர முன்னணியின் புறந்தள்ள முடியாத பொறுப்பு எனக் கருதுகிறோம்.
மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளின் உதவியுடன் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள இரண்டாம் ஈழ நடவடிக்கையின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டு வருகிறது என்பதை நாம் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்தோம், ஹசன் அலி அவர்களின் கருத்து இதனை மேலும் உறுதிப்படுகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் உட்பட மேற்குலக ஏகாதிபத்தியவாதிகளின் நேரடியான அனுசரணையின் கீழ் செயற்படும் அடிப்படைவாத அணிகள் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையில் விரோதத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் கடந்த காலம் முழுதும் ஈடுபட்டன.
மேலும் இரண்டு இனங்களுக்கும் இடையில் இருந்து வரும் நீண்டகால சகவாழ்வை உடைக்க வேண்டும் என்ற முயற்சியில் இவர்கள் ஈடுபட்டனர்.
சிங்கள மக்களின் தொந்தரவுகளை தொடர்ந்தும் பொறுத்து கொள்ள முடியாது.
இதற்கு பதிலாக வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடன் கைகோர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை முஸ்லிம் மக்கள் மத்தியில் உறுதியாக்கும் எதிர்பார்ப்பு முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையில் பகையை ஏற்படுத்தும் மோதல் நிலைமையை பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் தனது புதிய ஈழ நடவடிக்கைக்கு ஏதுவான தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.
இதனடிப்படையில், முதல் கட்டமாக வடக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும்.
இரண்டாவதாக கிழக்கு மாகாணத்திலும் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணியை ஏற்படுத்தும்.
இதன் பின்னர், இரண்டு மாகாணங்களையும் ஒன்றாக இணைக்கும் யோசனை நிறைவேற்றப்படும்.
இதனையடுத்து வடக்கு, கிழக்கு மாகாணத்தில் சுயாட்சி அதிகாரசபையை ஏற்படுத்தி, இறுதியில் ஐக்கிய நாடுகளின் அனுமதியுடன் தமிழீழத்தை உருவாக்குவது இவர்களின் நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸூம் ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்கனவே இணைந்து விட்டன.
அடுத்த கட்டமாக கிழக்கு மாகாணத்தில் இணைந்து அதிகாரத்தை பகிர்ந்தும கொள்வதே இவர்களின் திட்டமாகும் எனவும் மொஹமட் முஸ்ஸாமில் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVfrz.html

Geen opmerkingen:

Een reactie posten