உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் 40வது ஆண்டு நிறைவு விழாவும் எதிர்வரும் 4ம், 5ம் திகதிகளில் ஜேர்மனியில் நடைபெறவுள்ளது.
உலகெங்கும் 50க்கும் அதிகமான நாடுகளில் கிளைகளை அமைத்து கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்காக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் செயற்பட்டு வருகின்றது.
இம்மாநாட்டிற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உட்பட பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு சிறப்புற வாழ்த்திய பழ.நெடுமாறன் , மு.கருணாநிதி
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க ஐரோப்பிய ஒன்றியம் நடாத்தும் மாநாடு சிறப்புற நடைபெற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் மற்றும் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோர் தமது வாழ்த்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் 4ம் 5ம் திகதிகளில் ஜேர்மனியில் நடைபெறவிருக்கின்ற மாநாட்டுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் பழ.நெடுமாறன், மற்றும் மு,கருணாநிதி ஆகியோர் தெரிவிக்கையில்,
உலகத் தமிழினத்திற்கு அபாயம் சூழ்ந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் இங்கு கூடியிருக்கும் தமிழர்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்பட்டு தமிழினத்திற்கு நேர்ந்துள்ள அபாயத்தை எதிர்கொள்ள ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என தனதறிக்கையில் பழ,நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு நாட்டிலும் நிலவிடும் நவீன கலாச்சாரச் சூழல்களில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் வெவ்வேறானவை. அந்தப் பிரச்சினைகளைப் பற்றி அலசி ஆராய்ந்து தமிழினத்தின் மொழி, பண்பாட்டு பின்னணி சிறிதும் சிதையாவண்ணம் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை வகுத்திட வேண்டிய தருணம் வந்துள்ளது. முக்கியமான இந்தப் பிரச்சினைகளைப் பற்றி இந்த மாநாட்டில் விவாதித்து உரிய தீர்வுகளை உலகத்தமிழர்களுக்கு அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன் என தனதறிக்கையில் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten