தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 oktober 2014

இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன் (படம் இணைப்பு)


வேறு ஒருவருடன் போனில் பேசியதால் கள்ளக்காதலியை வெட்டிக் கொன்றவரை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது கள்ளக்காதல்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா கரிவலம்வந்தநல்லூர் அருகே மலையடிப்பட்டி தெற்கு காலனியைச் சேர்ந்தவர், திராவிடன். அவருடைய மகள் கார்த்திகா (வயது 24). இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தவர்.

தேனி மாவட்டம் அனுப்பம்பட்டியைச் சேர்ந்தவர், இருளப்பன். அவருடைய மகன் குபேந்திரன் (32). இவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்தவர்.

இந்த நிலையில் கார்த்திகாவுக்கும், குபேந்திரனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அவர் கள் கரிவலம்வந்தநல்லூர் அருகே மலையடிப்பட்டியில் கடந்த ஒரு ஆண்டாக கணவன்-மனைவியாக குடித்தனம் நடத்தி வந்தனர். சில நாட்களாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

வெட்டிக் கொலை

நேற்று காலையிலும் பிரச்சினை ஏற்பட்டது. அந்த தகராறில், கார்த்திகாவை அரிவாளால் குபேந்திரன் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. கழுத்து, கைகள் உள்பட பல இடங்களில் பலமான வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கார்த்திகா கீழே சாய்ந்தார். பின்னர் அங்கிருந்து குபேந்திரன் தப்பி ஓடிவிட்டார்.

கார்த்திகாவின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அங்கு அவர் ரத்தவெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி கரிவலம்வந்த நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு கலிவரதன், இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். கார்த்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திடுக்கிடும் தகவல்கள்

விசாரணையில், கள்ளக்காதலனால் கார்த்திகா கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் தெரியவந்தன.

கார்த்திகாவின் தந்தை திராவிடன் கேரள மாநிலம் மூணாறில் வேலைபார்த்து வந்தார். அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார்.

எனவே மகள் கார்த்திகாவுக்கு மூணாறில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார். கார்த்திகாவுக்கும், செந்தில் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இவர்களது திருமண வாழ்க்கை முதலில் நன்றாக சென்று கொண்டிருந்தது. பின்பு கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே பிரிந்துவிட்டனர். அவருடைய கணவர் செந்திலின் குடும்பத்தினர் குழந்தையை வாங்கிக் கொண்டனர். தனிமையில் இருந்த கார்த்திகா ஒரு தேயிலை எஸ்டேட்டில் வேலைசெய்து வந்தார்.

ரகசிய தொடர்பு

தினமும் பஸ்சில் வேலைக்கு சென்று வந்தார். அதே பஸ்சில்தான் குபேந்திரனும் சென்று வந்தார். அப்போது கார்த்திகாவும், குபேந்திரனும் சந்தித்துக் கொண்டனர். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சந்தர்ப்பம் கிடைத்த போது எல்லாம் கார்த்திகாவை தேடி அவரது வீட்டுக்கே குபேந்திரன் செல்ல தொடங்கினார்.

இந்த தொடர்பு பற்றி அக்கம்பக்கத்தினர் பேசத் தொடங்கினர். எனவே இருவரும் ஊரைவிட்டு சென்றுவிடலாம் என்று முடிவெடுத்தனர்.

பின்பு கார்த்திகாவின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மலையடிப்பட்டிக்கு வந்துவிட்டனர். இருவரும் கடந்த ஒரு ஆண்டாக கணவன்-மனைவி போன்று குடித்தனம் நடத்தி வந்தனர்.

செல்போன் பேச்சு

கார்த்திகா ராஜபாளையத்தில் ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். ஆனால், குபேந்திரன் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

வீட்டில் இருக்கும் போது கார்த்திகா யாருடனாவது செல்போனில் பேசிக் கொண்டு இருந்தாராம். இது குபேந்திரனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் வேறு யாருடனாவது பழக்கம் வைத்து இருக்கிறாரோ? என்று சந்தேகம் அடைந்தார்.

இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று காலையில் மில்லில் வேலை பார்த்துவிட்டு கார்த்திகா வீடு திரும்பினார். அப்போது அவர் செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததை பார்த்ததும், குபேந்திரனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியது. “வாழப்பிடிக்கவில்லை என்றால் இருவரும் பிரிந்துவிடலாம்“ என்பதுபோல் கார்த்திகா கூறியதாக கூறப்படுகிறது.

இந்த தகராறில் கள்ளக்காதலியை குபேந்திரன் வெட்டிக்கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கள்ளக்காதலன் கைது

தப்பி ஓடிய குபேந்திரனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
01 Oct 2014

Geen opmerkingen:

Een reactie posten