[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 12:53.41 AM GMT ]
வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்தக் குற்றச்சாட்டை ஆங்கில ஊடகம் ஒன்றிடம் சுமத்தியுள்ளார்.
தமது உறவுகளை காணவில்லை என்று மக்கள் வந்து முறையிடும் போது உங்களிடம் கோழிகள் இருந்தனவா? ஆடுகள் இருந்தனவா? என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்புகின்றனர்.
இது குறித்த ஆணைக்குழு நகைச்சுவை குழுவாக மாறியுள்ளமையை காட்டுவதாக ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவை பொறுத்தவரையில் முள்ளிவாய்க்காலுக்கு செல்லும் போது பலர் காணாமல் போயினர். அத்துடன் நந்திக்கடல் ஊடாக வட்டுவாகலுக்கு செல்லும் போது பலர் காணாமல் போயினர் என்றும் ரவிகரன் தெரிவித்தார்.
காணாமல் போனதாக கூறப்பட்ட குறித்த அனைவருமே படையினரிடம் சரணடைந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் ஆணைக்குழு நகைச்சுவை குழுவாக மாறும் போது மக்கள் எந்தளவு நம்பிக்கையுடன் அதன் முன் முறையிட முடியும் என்று ரவிகரன் கேள்வி எழுப்பினார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVgw5.html
எரிபொருள் சீராக்கல் கட்டணம் நீக்கம்!- பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 01:31.53 AM GMT ]
மின்சார கட்டணத்துடன் இணைக்கப்பட்டிருந்த எரிபொருள் சீராக்கல் கட்டணம் நீக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்கட்டணத்தை 25 சதவீதத்தால் குறைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கமைய வீட்டுப் பாவனைக்கான மின் கட்டணத்தின் தீர்வைகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுசீரமைத்துள்ளது.
இதற்கமைய, மறுசீரமைக்கப்பட்ட மின்கட்டண தீர்வைகள் செப்டம்பர் 16ம் திகதி முதல் அமுல்படுத்தப்படுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
30 நாட்களுக்குள் பயன்படுத்தப்படும் ஆகக்கூடிய 60 கிலோ வோர்ட் மின்வலுவிற்கான தீர்வை மற்றும் அதற்கு மேற்பட்ட பயன்பாட்டிற்கான தீர்வை ஆகியனவே மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, 60 அல்லது அதனிலும் குறைந்த அலகு மின்சாரத்தை பயன்படுத்தும் வீட்டுப் பாவனையாளர்களுக்கான வரையறுக்கப்பட்டுள்ள தீர்வைகள். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,
300 அலகுகளுக்கு மேற்பட்டவர்களுக்கு 25 வீத கட்டண குறைப்பு சலுகை வழங்கப்படாது என்று தெரிவிக்கப்படுவதில் எதுவித உண்மையும் கிடையாது. அவ்வாறு எந்த முடிவும் எட்டப்படவில்லை. வீடுகளுக்கும் 25 வீத கட்டண குறைப்பு வழங்கப்படும். தொழிற்சாலைகள், சுற்றுலாத்துறை என்பவற்றுக்கு இந்த சலுகை வழங்கப்படமாட்டாது.என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVgw6.html
சம்பந்தன், தொண்டமான், ஹக்கீம் ஆகியோரின் கட்சிகளுக்கு எதிராக சிங்கள பௌத்த மக்களை அணி திரட்ட வேண்டும்!- ஹெல உறுமய
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 01:38.58 AM GMT ]
அண்மையில் கண்டியில் நடைபெற்ற சிங்கள வர்த்தகர் முன்னணியினால் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புää ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பேரம் பேசும் பலத்தை சிதறடிக்கச் செய்ய வேண்டும்.
பத்து லட்சம் சிங்கள பௌத்த வாக்குகளை ஆயத்தம் செய்வதன் மூலம் சிறுபான்மை கட்சிகளின் பேரம் பேசும் பலத்தை வலுவிழக்கச் செய்ய முடியும்.
2005ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ரத்தாகியுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளருடன் புதிய உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படும்.
சிங்கள பௌத்த கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தலைவர் ஒருவருக்கே ஆதரவளிக்கப்படும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVgw7.html
ஜெயலலிதாவின் சிறையடைப்பு ஒரு உள்ளகப் பிரச்சினை!- இலங்கை
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 01:42.46 AM GMT ]
எனவே அதில் இலங்கை அரசாங்கம் எவ்வித கருத்துக்களையும் கூறமுடியாது என்று இலங்கையின் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இலங்கை அரசாங்கம் எப்போதும் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே தொடர்புகளை பேணி வருகிறது.
எனவே இலங்கை அரசாங்கம் மாநில அரசாங்கங்களின் செயற்பாடுகள் குறித்து கவனத்தில் கொள்வதில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சுவாமி அரசியல் புரோக்கர்! குரோதத்துடன் ஜெயலலிதாவுக்கு தீர்ப்பளிக்கப்பட்டது: வழக்கறிஞர் தடா சந்திரசேகர்
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பானது, உள்நோக்கத்தோடு கொடுக்கப்பட்டதென மூத்த வழக்கறிஞர் தடா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்ப்புத் தொடர்பாக லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கர்நாடக சிறையில் அதிக பட்ச தண்டனையை வழங்கி, அவரை சிறைப்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கம் மற்றும் ஜெயலலிதா ஜெயிலில் அடைபடவேண்டுமென்ற காழ்ப்புணர்ச்சியில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக கருதுகிறேன் என அவர் குறிப்பிட்டார்.
தீர்ப்புக் கூறிய அன்றே பிணையில் வரக் கூடாது என திட்டமிட்டு 3 வருடத்தைக் காட்டிலும் 4 வருடம் என தீர்ப்பு வழங்கியள்ளார் நீதிபதி.
எந்த சட்டப் பிரிவுகளிலும் இவ்வாறு தண்டனை வழங்கப்பட வேண்டுமென கூறப்படவில்லை. நீதிபதி தனது கைப்பட தீர்ப்பபை நான்கு நாட்களாக எழுதினார் என்பதை யாரும் பார்க்கவில்லை.
இந்த தீர்ப்பில் அரசியல் கலந்துள்ளது. விரைவில் உலகத்திற்குத் தெரியவரும் என வழக்கறிஞர் தடா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்திய மத்திய அரசு ஜெயலலிதாவை திட்டமிட்டு பழிவாங்கியதா?- விசேட அரசியல் ஆய்வு
http://www.tamilwin.com/show-RUmszATVKVgxy.html
நவ்ரு தீவில் உக்கிரமடைந்துள்ள தொடர் ஆர்ப்பாட்டம்
[ புதன்கிழமை, 01 ஒக்ரோபர் 2014, 01:46.10 AM GMT ]
தற்போது வந்த தகவல்களின் படி 7 பேர் தம்மை தாமே துன்புறுத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு குடும்பம் சலவை தூள் பருகிய நிலையில் அவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனி நபர் ஒருவர் தனது கழுத்தை கூரிய ஆயுதத்தால் வெட்டி அவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக இயன் தெரிவித்துள்ளார்.
5 சிறுவர்கள் தமது வாயை தைத்து 4 நாட்களாக உணவு நீர் அருந்தாத நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை நவ்ரு தீவு வைத்தியசாலையில் சிறந்த முறையில் கவனிக்கப்படாத நிலையில் நவ்ரு முகாம் அதிகாரிகளுக்கும் அகதிகளுக்கும் இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றதை அடுத்து ஆர்ப்பாட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த நடவடிக்கை காரணமாக தற்போது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கினறன.
இதன் காரணமக தற்போது ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் வண்ணமாக 29 ஆதரவற்ற சிறுவர்களை நவ்ரு முகாம் தடுப்பு காவலில் இருந்து விடுதலை செய்து முகாமுக்கு அருகாமையில் சிறிய வீட்டில் விடுதலை செய்துள்ளதாக இயன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மொரிசனின் இந்த புதிய உடன்படிக்கைக்கு எதிராக வாக்களிக்கும் படி தொழில் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளத்வது மொரிசனின் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால் அகதிகள் நிரந்தர பாதுகாப்பு விசாவுக்கு விண்ணப்பிக்க முடியாது.
ஐக்கிய நாடுகளின் அகதி சட்டம் மீறப்படும், மொரிசன் அகதிகள் சட்டத்தை தமக்கு ஏற்ற மாதிரி மாற்றியமைக்க கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது.
அண்மையில் வந்த நீதிமன்ற தீர்ப்பு மீறப்படும் நிலைமை உருவாகும் என எச்சரித்துள்ளார்.
இந்த அரசு பதவிக்கு வந்த பின் உலக நாடுகளில் அகதிகளை கொடுமைப்படுத்தும் நாடு என்ற அவப்பெயரை அரசாங்கம் தற்போது ஏற்ப்படுத்தியுள்ளது.
இதற்கு முதல் இருந்த அரசாங்கம் அகதிகள் விடயத்தில் கரிசனை கொண்டிருந்தது தற்போது அது கேள்விக் குறியாகியுள்ளது.
ஒரு சிறிய தொகை அகதிகளை காப்பாற்றுவதை விட்டு விட்டு கீழ்த்தரமான நடவடிக்கையில் மொரிசன் ஈடுபட்டுள்ளார்.
இந்த புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால் அகதிகள் சட்டம் மனித நேயம் நீதி போன்றவை மீறப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இதன் காரணமாக இந்த மொரிசனின் நடவடிக்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு தொழில் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது கவலைக்கிடமான நபர் மரணித்தல் இந்த ஆண்டு வாழ்வதற்கு இடம் கேட்டு வந்த 25 நபரை கொன்ற என்ற புதிய சாதனையை மொரிசன் தனதாக்கி கொள்வார்.
http://www.tamilwin.com/show-RUmszATVKVgx0.html
Geen opmerkingen:
Een reactie posten