[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 01:34.40 AM GMT ]
அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் நிறைவில் இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் 50000 வீட்டுத் திட்டம் தொடர்பில் இந்த முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
50000 வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பிலான யோசனைத் திட்டத்தை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டுத் திட்டத்தில் குறிப்பிட்டளவு வீடுகள் வடக்கு மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் தேவானந்தா கோரியுள்ளார்.
டக்ளஸின் இந்தக் கோரிக்கைக்கு அமைச்சர் தொண்டமான் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இந்திய அரசாங்கம் வடக்கு மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதாகவும் இந்த திட்டம் மலையக பெருந்தோட்ட மக்களுக்கானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாக்குவாதத்தில் தலையீடு செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வீடமைப்பு திட்டத்தினை மலையகத்தில் முன்னெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காது ஜனாதிபதி தொண்டமானின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்து வெளியேறிய போது “ ஊவா மாகாணசபைத் தேர்தலில் பெருந்தோட்ட தமிழ் மக்களின் வாக்குகள் மூலமாகவே அரசாங்கம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டது எனவும், இதனை எப்படியாவது இல்லாமல் செய்ய டக்ளஸ் முயற்சிக்கின்றார்” என அமைச்சர் தொண்டமான் நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARbKXmw2.html
வாகனங்களின் விலைகள் சடுதியாக குறைவு
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 01:45.57 AM GMT ]
2015ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்தின்படி இந்த வாகன விலைக்குறைப்புக்கள் அமுலுக்கு வருகின்றன.
இயந்திர சக்திக்கு ஏற்ப இந்த விலைக்குறைப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்படி 1000சிசி வாகனங்கள் 202 வீதத்தில் இருந்து 173 வீதம் வரை குறைகின்றன.
20 ஆசனங்களை கொண்ட வேன்கள் 100 வீதத்தினால் குறைகின்றன.
ஏனைய வாகனங்களின் விலைகளும் இயந்திர சக்திக்கு ஏற்ப குறைப்படுகின்றன
http://www.tamilwin.com/show-RUmszARbKXmw3.html
நாட்டில் இன்னமும் சமாதானம் நிலை நாட்டப்படவில்லை: சஜித் பிரேமதாச (செய்தித் துளிகள்)
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 01:56.55 AM GMT ]
கொழும்பில் நேற்று நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணியின் சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போர் வென்றெடுக்கப்பட்டுள்ளது. போர் வெற்றியின் கௌரவத்தை ஆட்சி அதிகாரத்திற்கு வழங்குவதனைப் போன்றே நாம் வருந்துகின்றோம்.
ஏனெனில் போர் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும் சமாதானம் நாட்டில் நிலைநாட்டப்படவில்லை.
இனங்களுக்கு இடையில் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நாடு என்ற ரீதியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படுவதனை தடுக்கும் தரப்பினரே இன்று நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்.
மீண்டும் ஒரு தடவை நாட்டில் இனவாத விதைகளை தூவி அதனை வளரச் செய்வது தேசப்பற்றா? தேசத்தின் மீது கொண்ட நேசமா என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசப்பற்று என்ற பெயரில் சில கடும்போக்குவாதிகள் நாட்டில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்து வருவதனையே சஜித் பிரமேதாச இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள பௌத்த அமைப்புக்கள் சில தேசப்பற்று என்ற பெயரில் கடும்போக்குவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நன்மை கிடையாது- விஜித ஹேரத்
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடையாது என ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள கட்சித் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கு என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் இம்முறை 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் சமர்ப்பிக்கப்பட்டதனைப் போன்று அரசாங்கம் இம்முறையும் டொபி, சொக்லட் போன்ற இனிப்புக்களை வழங்கி மக்களை ஏமாற்றியுள்ளது.
முழு நாட்டு மக்களுக்கும் இந்த வரவு செலவுத் திட்டதின் மூலம் நன்மை கிடையாது.
மீனவர்கள், பெருந்தோட்ட மக்கள் போன்றவர்களை அரசாங்கம் இந்த வரவு செலவுத்திட்டத்தில் நிராகரித்துள்ளது.
குறிப்பாக அனைத்து மக்களும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசியல் என்பது வெறுத்து போன தொழில்: பிரதியமைச்சர் லக்ஷமன் வசந்த பெரேரா
அரசியல் என்பது மிகவும் வெறுத்து போன ஒரு தொழில் எனவும் பேச்சு வாங்கியது போதும் என்றாகிவிட்டது எனவும் பிரதியமைச்சர் லக்ஷமன் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
லக்கல ஹத்தோட்ட அமுன பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலை ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியலில் வளங்களை பறித்து கொள்ளும் தந்தையையும் மகனையும் அரசிலுக்கு கொண்டு வருகிறார், அண்ணன் தம்பியை கொண்டு வருவார் என கூறப்படுகின்றது.
எனது குடும்பத்தில் எவரையும் அரசியலுக்கு கொண்டு வரவும் இல்லை கொண்டு வரப் போவதுமில்லை.
எனக்கு எதிராக ஊடகங்கள் சேறுபூசி வருகின்றன கசிப்பு காரன், எதனோல் காரன் என ஊடகங்களில் கூறப்படுகின்றன.
எதனை கூறினாலும் நான் சோர்வடைய போவதில்லை.
அதேவேளை நாட்டின் வரலாற்றில் இதுவரை சமர்ப்பிக்கப்படாத வரவு செலவுத் திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும் லக்ஷமன் வசந்த பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARbKXmw4.html
Geen opmerkingen:
Een reactie posten