ஜனநாயகப் போராட்டத்தில் முஸ்லிம்களும் ஒன்றிணைய வேண்டும்: மாவை எம்.பி- அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த மாவை எம்.பி: அஸ்வர் கூச்சல்
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 02:51.31 AM GMT ]
அகில இலங்கை முஸ்லிம் லீக் வலிபர் முன்னணிகளின் 44ஆவது வருடாந்த மாநாடு நேற்று ஹெக்டர் கொப்பேக்கடுவ கமநல ஆராய்ச்சி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் 80 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஜனநாயக ரீதியான ஆட்சியொன்று இருக்கின்றது. ஆனால் அதனைத் தாண்டி இரணுவ ஆட்சி, ஆளுநர் ஆட்சி என்பன தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
வடக்கிலும் கிழக்கிலும் இன்று இராணுவ மயப்படுத்தப்பட்ட அரசியலும் அரசியல் மயப்படுத்தப்பட்ட இராணுவமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எமது இன, மத, சமூக அடையாங்களை நிலைநிறுத்தி எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக நாம் போராடாது இருக்கவும் முடியாது.
1949ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியின் முதலாவது மாநாட்டில் தந்தை செல்வா முஸ்லிம்களுடைய சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தினார். ஒன்றுபட்டுச் செயற்பட வலியுறுத்தினார். இன்று நாம் எமது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அறவழிப் போராட்டத்தை அறிவித்திருக்கின்றோம்.
வன்முறை வேண்டாம். அதனால் நீங்களும் நாங்களும் நிறையவே அனுபவித்து விட்டோம். 1962ஆம் ஆண்டு தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிரக பேராட்டம் நடத்தப்பட்ட போது ஆயிரமாயிரம் முஸ்லிம் பெண்கள் கூட அதில் பங்கேற்றனர். அதை நான் என் கண்ணால் பார்த்திருக்கின்றேன்.
மீண்டும் அந்தக் காலம் வருகின்றது. எமது இலக்கை அடைவாற்காக ஜனநாக ரீதியில் நாம் முன்னெடுக்கும் போராட்டத்தில் அனைத்து முஸ்லிம் தரப்புக்களும் பங்கேற்க வேண்டும் என்றார்.
மேலும், வடக்கு மாகாண சபைக்கு அரசு முழுமையான அதிகாரங்களை வழங்கினால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைத்து முஸ்லிம்களையும் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற உடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த மாவை எம்.பி: அஸ்வர் கூச்சல்
அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்த தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக அஸ்வர் எம்.பி. கூச்சலிட்டு எதிர்ப்பைக்காட்டியுள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன கூட்டத்தில் இந்தச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதில் பிரதம அதிதியாக பிரதமர் டீ.எம். ஜயரத்ன கலந்துகொண்டிருந்தார். சிறப்பு அதிதியாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கலந்து கொண்டிருந்தார்.
மாவை சேனாதிராஜா அவர்கள் அங்கு உரையாற்றிய போது , அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் சிறுபான்மை இன மக்கள் மீதான பாரபட்சம் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்,தமிழ்- முஸ்லிம்களின் ஒற்றுமையான அரசியல் செயல்பாடுகள் பற்றியும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் டீ.எம்.ஜயரத்ன அவற்றை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தார்,எனினும் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அஸ்வர் எம்.பி. உடனடியாக எழுந்து நின்று கூச்சல் போட்டார்.
இதனையடுத்து மாவை சேனாதிராஜாவும் சூடாக பதிலடி கொடுத்தார்.
இருவரும் கடுமையாக வாக்குவாதப்பட்டனர்,அஸ்வர் எம்.பி.யின் செயல்பாடுகள் குறித்து சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒருசிலர் அவருக்குக் கேட்கும் வண்ணமாகவே புத்தளம் பூருவா (புத்தளத்துக் கழுதை) சத்தம் போடவேண்டாம் என்று கத்தியுள்ளனர்.
இதனையடுத்து சங்கடத்தில் நெளிந்தவாறு அஸ்வர் எம்.பி. எதிர்ப்பைக் கைவிட்டு அமர்ந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் அஸ்வர் எம்.பி.யின் செயற்பாடுகள் காரணமாகவே அரசியல் வட்டாரத்தில் அவருக்கு புத்தளத்துக்கழுதை என்ற பட்டப் பெயர் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARbKXmw7.html
புலிகளின் தடை நீக்கம்! முடக்கப்பட்ட சொத்துக்களின் அடுத்தகட்ட நிலை என்ன? விபரிக்கிறார் சட்ட ஆலோசகர் லதன்
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 02:56.52 AM GMT ]
எமக்கு இன்று கிடைத்தது தடை நீக்கத்தை எம் இனம் சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.
அத்துடன் எமது போராட்டத்தை விடுதலைப் போராட்டமாக உலக அங்கீகாரத்தை பெறவேண்டிய கட்டாய தேவை எம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் விடுதலைப் புலிகளின் வழக்கிற்கு உதவிய சட்ட ஆலோசகர் லதன் சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARbKXmxy.html
இணையத்தள வதந்திகள் அடிப்படையில் அரசு செயற்படாது: நிமல் சிறிபால டி சில்வா
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 04:30.49 AM GMT ]
இணையத்தளங்களில் பிரசுரமாகும் வதந்திகள், ஊர்வம்புகளின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுவதில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிப்பதானால் அது உரிய முறையில் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு - செல்வு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு முன்னதாக ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்தார்.
அதில் அரசாங்கம் அவசர சட்டமூலமாக ரதன தேரரின் 19 வது அரசியலமைப்பு திருத்தத்தை சமர்ப்பிக்க தயாராவதாக இணையத்தளங்களில் செய்தி வெளிகியுள்ளதாக தெரிவித்தார்.
19 வது திருத்தத்திற்கு நாமும் ஆதரவளிக்கவுள்ளதால் அதனை சமர்ப்பிக்கும் முன்னர் ஐ.தே.க.வுடனும் பேசுவோம் என்று நிமல் சிறிபால குறிப்பிட்டார்.
இதன் போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்த ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. இல்லாத சட்டமூலமொன்று குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்புகிறார். அவ்வாறு ரதன தேரரின் சட்டமூலம் எதுவும் கிடையாது என்றார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த மனுஷ நாணயக்கார எம்.பி., தானே இணையத்தளங்களில் செய்தி வெளியிட்டு விட்டு தானே கேள்வி கேட்பது தவறு என சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmszARbKXmxz.html
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அலட்சியம் - அடிமை போல் வாழும் புகலிடக் கோரிக்கையாளர்கள்
[ திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2014, 02:21.45 AM GMT ]
இதில் அநேகமானோரின் விசாக்கள் முடிவடைந்தும் இதுவரைக்கும் புதிப்பிக்கவும் இல்லை.
படகில் வந்ததன் காரணமாக தற்போது அகதிகள் இருக்கின்றரர்களா என்ற ஒரு பாரிய கேள்வி உருவாகி உள்ளது.
இதன் அடிப்படையில் எங்களுக்கு விரும்பினால் நேரம் இருந்தால் அகதிகளின் விண்ணபம் பரிசீலிக்கப்படும். இல்லையேல் சொந்த நாட்டுக்கு போகலாம் என்ற அடிப்படியில் அகதிகளை கையாளும் விதம் மிகவும் வேதனை அளிப்பதாக புகலிடம் கோருவோர் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் உயர் நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையாளர் அறிவிப்பு என்பனவற்றுக்கு மதிப்பளிக்காமல் அகதிகளை அடிமை போல் நடத்தப்படுகின்றனர்.
இதன் காரணமாக மிகவும் மோசமான நிலையில் புகலிடம் கோருவோரின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அகதி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszARbKXmw5.html
Geen opmerkingen:
Een reactie posten