[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 02:02.45 PM GMT ]
ஹொரணையில் வசிக்கும் 9 வயது சிறுவனும் அவரின் சொந்தக்காரரான பௌத்த பிக்கு ஒருவரும் நேற்று கடைத்தெருவுக்கு சென்ற நிலையில் காணாமல் போயினர்.
இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின்கீழ் பொலிஸார் விசாரணையை நடத்தினர்.
இதன்பின்னர் இன்று காலை குறித்த சிறுவன் அநுராதப்புரத்தில் வைத்து மீட்கப்பட்டார். இதன்போது அவரை கடத்திய பௌத்த பிக்குவும் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் குறித்த பௌத்த பிக்கு சிறுவனை விடுவிக்க கப்பம் கோரியதாக விசாரணையின்போது சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பௌத்தபிக்கு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnv6.html
புதுக்குடியிருப்பில் கிரவல் தேவைக்கு வீதியை அகழ்வார்களா? மக்கள் முறைப்பாடு
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 02:13.38 PM GMT ]
வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனிடம் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, நேற்று மாலை குறித்த பகுதிக்கு விரைந்த ரவிகரன், அப்பகுதிகளில் அளவுக்கு அதிகமாக கிரவல் அகழப்பட்டு இருப்பதையும் வீதியும் சேர்ந்து அகழப்பட்டிருப்பதையும் அவதானித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,
புதுக்குடியிருப்பு - கேப்பாப்பிலவு வீதியில் ஊடறுத்துச்செல்லும் கள்ளியடி என்ற இடத்தில் இருந்து காட்டு அந்தோனியார் கோயிலுக்கு செல்லும் பாதையின் பக்கங்கள் மிகவும் அதிகமாக தரமான கிரவல் வளத்தைக் கொண்ட பகுதியாகும்.
இப்பகுதியில் தற்போது, அளவுக்கு அதிகமாக கிரவல் முறையற்ற விதத்தில் எடுக்கப்படுவதாகவும் ஒரு சில இடங்களில் பாதையின் பகுதிகள் கூட முற்றாக அகழப்பட்டு உள்ளதாகவும் மக்கள் விசனப்பட்டுள்ளனர்.
கிரவல் எடுக்கக்கூடிய அளவில் குறித்த பிரதேசங்களில் இருந்து எடுக்கலாம். இங்கோ எமது பிரதேசத்தையே சீர்குலைக்கும் வகையில் கிரவல் அகழப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்திலேயே இன்னும் பல வீதிகள் முழுமையாக திருத்தப்படாமல் இருக்கின்றன. எமது பிரதேசத்திலேயே கிரவல் தேவைகள் இருக்கும் போது வெளி மாவட்டங்களுக்காக கிரவல் அள்ளும் அனுமதிகளை ஏன் வழங்க வேண்டும் என்றும் மக்கள் கவலை வெளியிட்டனர்.
மேலும், கிட்டத்தட்ட 30 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பில் இவ்வாறான சீரழிப்பு- கிரவல் அகழ்வு நடைபெற்று அவை வேறு மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் முறையிட்டனர்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மட்டும் UN கபிடெற் (UN Habitat) நிறுவனத்தால் உள்ளக வீதிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 கோடியே 80 இலட்சம் ரூபா நிதியில் 50 வீதமான வேலைகள் மாத்திரமே முடிவுற்ற நிலையில் உள்ளன.
மிகுதி வேலைகளுக்கு தரமான கிரவல்களாக இருக்கும் மேற்படி இடங்களில் அகழக்கூடியவற்றை எடுத்து இப்பிரதேசத்தின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் அடுத்த மாவட்டத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்து நிதி சம்பாதிக்கும் தென்னிலங்கை நிறுவனங்கள் தொடர்பிலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் தொடர்பிலும் கனிய வளப்பகுதி, பிரதேச செயலகம் என இதற்கு பொறுப்பானவர்கள் பதில் கூறவேண்டும் என்று மக்கள் கருத்து வெளியிட்டதாக ரவிகரன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் நேரடியாக வடமாகாணத்திற்கான விவசாய மற்றும் கனியவள அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக மக்களிடம் உறுதியளித்தாக அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnv7.html
அரசாங்கத்தின் செலவில் 75 நீதிபதிகளுக்கு சுகபோக சுற்றுலா?
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 02:26.57 PM GMT ]
75 நீதிபதிகளுக்கு, குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளை கொண்டு விரிவுரைகளையும் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
75 நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மட்டக்களப்பு பாசிக்குடாவில் அமைந்துள்ள அமாயா ஹொட்டலில் மூன்று நாட்கள் தங்கியிருப்பதற்காக வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்கள் கொழும்பில் இருந்து இன்று மூன்று சொகுசு பஸ்களில் கொழும்பில் இருந்து பாசிக்குடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
பயணத்திற்கான செலவுகளை இலங்கை மத்திய வங்கி ஏற்றுள்ளதுடன் வர்த்தக வங்கி ஊடாக இதற்கான செலவு தொகை செலுத்தப்பட உள்ளது. அரசாங்கம் செலவிடுவதை மறைப்பதற்காகவே வங்கி ஊடாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமாயா ஹொட்டலில் நீதிபதிகளுக்கான விரிவுரை நடத்தப்பட உள்ளதுடன் முதலாவது விரிவுரையை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் நிகழ்த்த உள்ளார். இரண்டாவது விரிவுரையை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ள புவனேக அலுவிஹார நிகழ்த்த உள்ளார்.
அதேவேளை முதல் முறையாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள குற்றவாளி ஒருவர் நீதிபதிகளுக்கு விரிவுரை வழங்குவது ஆசியாவின் ஆச்சரியம் என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
அந்த குற்றவாளி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் எனவும் அவருக்கு எதிராக சில வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இவரை தவிர கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சால் பெரேராவும் நீதிபதிக்கு விரிவுரை வழங்க உள்ளார்.
இராணுவ அதிகாரிகளை கொண்டு சுதந்திரமான நீதித்துறையை கொண்ட எந்த நாடும் விரிவுரைகளை நடத்துவதில்லை எனவும் அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், நாட்டின் சகல துறைகளையும் சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டு ராஜபக்ஷவினர் பற்றி விரிவுரைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது குற்றவாளிகளையும் இராணுவத்தினரையும் பயன்படுத்தி நீதிபதிகளுக்கு விரிவுரை நடத்தப்பட உள்ளது.
நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும் இப்படியான மோசடியான செயல்கள் இலங்கையின் வரலாற்றில் என்றும் நடந்ததில்லை. இது நாட்டின் நீதிமன்ற சுதந்திரத்தில் கரும்புள்ளியை ஏற்படுத்தும் எனவும் அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnwy.html
சர்வதேச செஞ்சிலுவைச் சங்க நிதியில் விதை நெல் வழங்கும் நிகழ்வு: ஈ.பி.டி.பியின் மோசடி அம்பலம்
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 02:40.28 PM GMT ]
இந்த நிகழ்வில், ஈ.பி.டி.பி தலையிட்டு மோசடி இடம்பெற்றுள்ளமை அம்பலமாகியுள்ளது.
மனிதாபிமான அமைப்பாகவும் நடுநிலையாகவும் அரசியல் பேதமற்று இயங்குகின்ற கொள்கையுடைய அமைப்பாக அறியப்படுகின்ற சர்வதேச செஞ்சிலுவை சங்க அமைப்பை பயன்படுத்தி விதை நெல் வழங்கும் பயனாளிகள் தெரிவில் ஈ.பி.டி.பியோடு தருமபுரத்தில் இருந்து மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் செல்வம் என்பவர் தலைநுழைத்து அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
ஐ.சி.ஆர்.சியின் நன்மதிப்பை கெடுக்கும் வகையிலும் ஏழை விவசாயிகள் ஏராளம் பேரை புறக்கணிக்கும் வகையிலும் பயனாளிகள் தெரிவை மேற்கொண்டு பெருமளவிலான விதை நெல் மோசடியை ஈ.பி.டி.பி செய்துள்ளதாக தருமபுரம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஈ.பி.டி.பி சார்பாக இந்த மோசடி வேலையை செய்த செல்வம் என்பவர் விதை இரண்டு லோட் விதை நெல்லினை விவசாயிகளுக்கு கொடுக்காது ஏற்றிச்சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வரட்சி நீங்கி மழை பெய்து வரும் நிலையில் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த நெல் விதைக்காக காத்திருந்த ஏழை விவசாயிகளின் வயிற்றில் ஈ.பி.டி.பி அரச அதிகாரத்தை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnwz.html
Geen opmerkingen:
Een reactie posten